பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 221

அவனுக்கும் தாகம், பசி, மோகம், போகம் எல்லாமே இருந்திருக்கும். அதற்கான மிருக உணர்ச்சிகளோடுதான் வரையறை ஏதுமின்றி அவன் வாழ்ந்திருக்கிறான்.

இவ்வாறு, காட்டுமிராண்டியாக வாழ்ந்த இந்த உணர்ச்சிகளை மிருக உணர்ச்சிகள் என்கிறார் ஃப்ராய்டு அதை ஆங்கிலத்தில் அஃறிணை உணர்ச்சியாக "D" (இட்') என்று குறிப்பிடுகிறார். அதாவது தன்னை அறியாமலேயே ஆவேசம் கொள்ளும் துண்டல்' உணர்ச்சி என்கிறார்.

ஆபத்தான பகைகளிலிருந்தும், இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, சமூக, சமுதாய உணர்ச்சிகளைப் பெற்றிடப் போராடி வெற்றி பெற்ற தன்மான உணர்ச்சிகளைத்தான், அதே ஃப்ராய்டு "EGo" ஈகோ - அதாவது, தான் என்ற அகந்தை உணர்ச்சியை, தன் முனைப்பு உணர்ச்சியை ஃப்ராய்டு "EGO" (ஈகோ) என்று ஆங்கிலத்தில் கூறினார்.

மனிதனுடைய மூளையில் மிருக உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சக்தியை இழந்து, தான் என்ற தன்முனைப்பு அகந்தை உணர்ச்சி, மெல்ல - மெல்ல அதிகமாக இடம் பிடித்து வரும் போராட்ட உணர்ச்சிகளே வெற்றி பெற்று வந்தன:

ஆனால், தன்னை அழிக்க, ஒழிக்க, கொல்ல, வெல்ல - அகந்தை உணர்ச்சி வரம்பு தாண்டி வரும்போது, மனிதனிடம் இருந்த ஆதி விலங்குனர்ச்சி சீறி, கர்ஜித்து, பிளிறி, உறுமி கொலை செய்யவும் தோள் தட்டி எழுகின்றது!

அந்த நேரத்தில்தான், மனித இனம் கற்று கொண்ட பண்பாடுகள்: உணர்ச்சிகள் - உருக்கள் கொண்டு - தடுத்து நிறுத்துகின்றது.

கொல்லாதே! ஏன் அவனைக் கொல்லத் தோள் தட்டிச் சீறி எழுகிறாய்? கொல்வதால் நீ கொள்ளும் லாபம் என்ன? எதிரி ஏன் தவறு செய்தான் என்று சிந்தித்தாயா? அவன் கொண்ட தவறுக்கும் ஏதாவது காரணம் இருக்கலாம் இல்லையா? பகைவனை அழிப்பதைவிட, அவனுக்கு அன்பும், அருளுமுடைய இரக்க அறத்தைக் காட்டிப் புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாதா?

என்ற உணர்ச்சி மனிதனிடம் எழும்போது, அவை ஒரு சமுதாயத்தைக் காக்கும் அறச் சிந்தனைகளாக உருப் பெறும்போதுதான் அது பண்பாட்டு உணர்ச்சியாகின்றது.

மிருக வெறி அடிப்பட்டு, மத சித்தாந்தம் மண் மூடிய பிறகு, விஞ்ஞான ரீதியான பகுத்தறிவு உணர்ச்சி பண்பாடாக அமைந்து