பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

வாலண்டினா கலத்துக்கு எவ்வித அபாயமும் நேராமல் தரை வந்தடைந்தது.

வாலண்டினா பெற்றோர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாரோஸ்லவி என்ற நகரிலுள்ள கார் டயர் சக்கர உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றினார்கள். பிறகு பஞ்சாலைகளிலும் வேலை செய்தார்கள்.

வாலண்டினா பட்டப் படிப்பை முடித்த பின்பு, வீர விளையாட்டு வகைகளில் பங்கேற்றார். விண்வெளியிலிருந்து மண்வெளிக்குப் பறந்துவரும் ஜம்பிங் ஆட்டங்களில் நல்ல பயிற்சியடைந்தார்.

1962-ஆம் ஆண்டில் விண்வெளி ஆய்வுப் பயணக் குழுவில் வாலண்டினா சேர்ந்து பெற்றப் பயிற்சி ஆர்வத்தாலும், அவரது உடல் வலிமையாலும், திறமையாலும் வாலண்டினா முதல் வான்வெளி ஆய்வு மாணவ விஞ்ஞானியாக விளங்கினார்.

சுஹ9கோவ்ஸ்கை விண் மண்டல பொறியாளர்கள் கழகத்தில் (Zhukovsky Air Engineers Academy) Gässjæl, soft (5 solo)&tassblo அவருடைய திறமைகளை மதிக்கத்தக்க, பாராட்டுமளவுக்குரிய விருதுகளை வாலண்டினா பெற்றார். அதனால் அவர் சோவியத் யூனியனின் ஹீரோயின் என்ற தகுதியைப் பெற்று விட்டார்.

வாலண்டினா கணவன் ஆண்ட்ரியன் நிக்கோலாயிவியும் ஒரு விண்வெளி ஆய்வு விஞ்ஞானியாவார். இவர்கள் இருவரும் உலகம் பாராட்டும் விண்வெளி பயணக் குடும்பத் தம்பதிகளாக உள்ளார்கள்.

மாணவ மணிகளே! உங்களிலே எத்தனை பேரோ விண்வெளி விஞ்ஞானிகள்? உங்களுடைய திறமைகள்தான் அதை நிறுவ வேண்டும் - செய்யுமா?