பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியக் குடியரசுத் தலைவர்கள் யார்? யார்?

மாணவ - மணிகளே!

நமது இந்திய நாடு 1947-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், யார் யார், நமது நாட்டில் குடியரசுத் தலைவர்களாகப் பதவி ஏற்றார்கள்? எந்தெந்த ஆண்டுகளில் அவர்கள் பதவி வகித்தார்கள் என்ற முழு விவரத்தையும் மறந்திருப்பீர்கள்.

மாணவர்கள் அல்லவா நீங்கள்? அதனால், அவர்கள் பெயர்களை மீண்டும் உங்களது நினைவில் நிறுத்த, இங்கே வெளியிடுகின்றோம். இதனைக் கவனத்தில் பதிய வைத்துக் கொள்வது நல்லதல்லவா? ஏதாவது தேர்வுகளின் வினாக்களுக்குப் பயன்படுமே!

டாக்டர் இராசேந்திர பிரசாத் : இந்தியா 26.1.1950-ஆம் ஆண்டு முதல் குடியரசு நாடாக மாறியது. அன்று இந்திய முதல் குடியரசுத் தலைவராக, சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் இராசேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். அவர், 12.5.1962-ஆம் ஆண்டு வரையில் அந்தப் பதவியில் இருந்தார். அதாவது, 12 ஆண்டுகள், 3 மாதங்கள், 17

அவர் தனது பதவியை வகித்தார்.

டாக்டர் இராசேந்திர பிரசாத்திற்குப் பிறகு, 13.5.1962-ஆம் ஆண்டு முதல் 13.5.1967-ஆம் ஆண்டு வரை இந்தியத் தத்துவஞானி, டாக்டர் சர். சரவபள்ளி இராதா கிருஷ்ணன் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவர் 5 ஆண்டுக் காலம் அந்தப் பதவியிலே இருந்தார். டாக்டர் இராதா கிருஷ்ணனுக்குப் பிறகு, 13.5.1967-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற டாக்டர் ஜாகீர் உசேன்