பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

விஞ்ஞான ஆய்வுப் பலன்கள்தான் நாட்டு முன்னேற்றத்துக்கான பாதைகளாக, வழிகாட்டிகளாக எதிர்காலத்தில் அமையும் என்பது கிருஷ்ணனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

விஞ்ஞானம் தவிர, வரலாறு, தத்துவம், மொழியியல், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் டாக்டர் கிருஷ்ணன் ஆழமாகவும், சிரத்தையுடனும் ஆராய்ச்சி செய்தார்.

அறிவியல் துறை அறிஞரான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்களில் வேறுபடுத்தி அடையாளம் காணப்படுபவராக அவர் எழுத்துத் துறைகள் அமைந்திருந்தன. அவரது விஞ்ஞான ஆய்வு விளக்கங்களை எல்லாம் தமிழ் மொழியிலேயே எழுதினார்.

புகழ் பெற்ற விஞ்ஞானியாக விளங்கிய டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் எழுதும் தமிழ் உரைநடை தெளிவானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் அமைந்திருந்தது.

அவருடைய இறுதி வாழ்க்கை, வருங்காலத் தலைமுறைகள் பின் தொடரும் குறிக்கோள்களாகவும், விஞ்ஞான ஆற்றல் வளத்தையூட்டும் உயிர்த் துடிப்புடையதாகவும் புகழ் பூத்து மணந்தது.

டாக்டர் கரிய மாணிக்கம் சீனிவாசனது அறிவியல் உழைப்பாலும், இலக்கியத் துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான தொண்டுகளாலும், விஞ்ஞான ஆய்வு விளக்கங்களைத் தமிழால் எழுத முடியுமா என்ற கேள்விக்குறி எழாத முன்பே, தனது தாய் மொழியாம் தமிழில் வளமான நடையில் எழுதிப் புகழ் பெற்றவர் டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன்.

தமிழ்நாட்டின் விஞ்ஞானிகளான சர்.சி.வி. இராமன், டாக்டர் சந்திரசேகரன், குளித்தலை டி.எஸ். சேஷாத்திரி போன்றவர்களுடன் ஒப்பிட்டுச் சிந்திக்குமளவிற்கு டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் விஞ்ஞான ஆய்வும் புகழ் பெற்றிருக்கிறது. இவர் மாணவர்களுக்கு முன்னோடியாக நடமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.