பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

'உடம்பினை முன்னம் இழுக்கென்றி ருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே - திருமந்திரம் 725

திருமூலர் சித்தர்களுக்கு எல்லாம் தலைவர், சிறந்த ஞானி; மன எல்லைக்கு அப்பாற்பட்ட உண்மையை உணர்ந்த அனுபவச் சித்தர். அந்த மகான் கூறுகிற அறிவுரையைப் பின்பற்றி, நாம் ஒவ்வொருவரும் நமது உடலை வளர்க்க வேண்டும். அப்போதுதான் நமது ஆயுள் நீளும். உயிரும் ஊறற்று சிறக்கும்.

எனவே, மாணவ மணிகளே, உங்களுடைய உடல்மீது நீங்கள் போதிய அக்கறை செலுத்தி ஒம்பாவிட்டால், பிணி பற்றிய உலக மேதைகளைப் போல, குணப்படுத்த முடியாத நோய்கள் உங்களைப் பழிவாங்கிவிடக் காத்துக் கொண்டிருக்கும்.

அந்த எச்சரிக்கைக் குரலாகத்தான் உலக மேதைகள் தீராத நோய்களுக்குப் பலியானச் சம்பவங்களைக் கீழே விளக்கியுள்ளோம். படித்து உணர்வு பெறுக.

ஆங்கிலக் கவிஞர்

அலெக்சாண்டர் போப்

அலெக்சாண்டர் போப் என்ற இங்கிலாந்து நாட்டுக் கவிஞர், தனது

உடலின் முதுகுத் தண்டு வளைவுகளில் காசநோய் சளி அடைபோலக்

கட்டிக் கொண்டு தீராத வேதனையால் அவதிப்பட்டார். அவர் தனக்குத்

தானே துணிகளைக்கூட உடுத்த முடியாமல் சில நேரங்களில்

நிர்வாணமாகவே இருப்பார்.

படுக்கைக்குச் செல்லும்போதும்கூட உட்காரவும், எழுந்திருக்கவும் முடியாது. மற்றவர்கள் உதவி இல்லாமல் இயங்க முடியாத அவர் ஒரு தீராத நோயாளி.

இந்த நோய் அவருக்கு ஏன் வந்தது?

சாலைக ரிலே நடக்கும் போதும், வேறு வேலைகளில் அவர் ஈடுபடும்போது, புழுதிகள், தூசிகள், மண் துகள்களின் சிறுசிறு தூள்கள் தாற்றில் கலந்து அவர் சுவாசத்தோடு உடலுக்குள் அணுப்ோலச் செல்வதைப் போப் தடுக்காமல் இருந்துவிட்டார்.

- அடிக்கடி Dustology டாக்டரிடம் சென்று உடலைக் கவனிக்கவும்

<9;&#ff தவறி விட்டார். அதனால், சய ரோகம் என்ற எலும்புருக்கி நோய் அவரைப் பற்றியது. பிறகுதான் அவர் மருத்துவரிடம் சென்றார். தேவை