பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் புகழ்பெற்ற திக்குவாயர்கள்!

கிரேக்க நாவன்மை வித்தகர் டெமோஸ்தனிஸ் அறிவுரை

జై 韃 :: i டெமோஸ்தனிஸ் }

மாணவ, மாணவியர்களே!

மாணவர்களில் ஓரிருவர் திக்குவாயர்களாக இருப்பார்கள். வகுப்புகளில் அவர்கள் படிக்கும்போதும், எழுதும்போதும் தாழ்வு மனப்பான்மையோடு நடமாடுவார்கள்.

அத்தகைய பிள்ளைகள் நெஞ்சுரத்தோடும், நேர்மையோடும் எதையும் சந்திக்கும் மனப் பக்குவம் பெற வேண்டும்.

அவ்வாறு பெறுவதற்கு கிரேக்கத் தத்துவஞானி டெமோஸ்தனிஸ் என்ற நாவலர் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றினாலே போதுமானது. சமுதாயம் திக்குவாயர்களைப் பாராட்டி மதித்து மரியாதை கொடுக்கும் காலச் சூழல் தானாகவே வந்தடையும் என்பது உறுதி.

தனக்கு வாய் - திக்கு வாயாக அமைந்துவிட்டதே என்று எந்த மாணவரும் கவலைப்படவோ, வருத்தப்படவோ அவசியமில்லை. அதனால்தான் உலகப் புகழ் பெற்ற திக்குவாயர்களது சம்பவங்களை இங்கே குறிப்பாக கூறியுள்ளோம்!

மாணவ, மாணவி மணிகளே, இவர்களது வாழ்க்கை நிலைகளைத் தெரிந்து, உணர்ந்து, செயல்பட்டால் எந்தத் துறையிலும் நீங்கள் சுலபமாக வெற்றி பெற முடியும். இதோ அவை : மோசஸ் பாதிரியார்

கிறித்துவ மதத்தில் மோசஸ் என்ற மதப் பாதிரியாரைப் பற்றி மாணவர்களும், பொது மக்களும் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர் புகழ் பெற்ற ஒரு சன்மயத் துறவி. ஆனால், அவர் ஒரு திக்குவாயர், வாய் தெற்றித் தெற்றிப் பேசுபவர்.

மக்களிடம் அவர் எதையும் பேசும்போது, மெதுவாக, நிதானமாக, நிறுத்தி, நிதானித்து, மென்மையாகப் பேசுவார். காரணம், தான் ஒரு திக்குவாயர் என்பதை அவர் மட்டுமே உணர்ந்தவர். பிறர் அதை