பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

கடவுளை எங்கே பார்க்கலாம்? பெஞ்சமின் ஃபிராங்லினிடம் குழந்தை கேள்வி?

மாணவ மணிகளே!

பெஞ்சமின் ஃபிராங்லின் ஒரு புதுமையான விஞ்ஞான மேதை எண்ணற்றக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த சகலகலா வல்லவர்: சிறு குழந்தைகள் என்றால் அவருக்கு அளவற்ற ஆசை. அதனால், குழந்தைகள் அவரைத் தேடி வந்து பழகுவது வழக்கமாக இருந்தது!

புகழ் பெற்ற விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்லினை குழந்தைகள் எங்கெங்கே சந்திக்கின்றார்களோ, அங்கங்கே எல்லாம் சிறு குழந்தைகள் கூட்டமாகக் கூடி விடுவார்கள். தெருமுனை ஆயிற்றே என்றுகூடப் பொருட்படுத்தாமல் ஓடி வந்து, அவருடைய கைகளைக் குலுக்கி - முத்தம் கொடுத்து மொய்த்து விடுவார்கள் - அவ்வளவு நெருக்கம் அவருக்குக் குழந்தைகளிடம்:

ஒரு நாள் ஒரு சிறு குழந்தை மிஸ்டர் ஃப்ராங்லின், கடவுளை எங்கே பார்க்க முடியும்? என்று கேள்வி கேட்டது.

அதற்கு ஃப்ராங்க்லின் குழந்தையைப் பார்த்து, ஒரு புன்சிரிப்பு சிரித்தார்.

அப்போது வானம் ஒளி வெள்ளம் பாய்ந்து தகத் தகாயமாக ஒளி வீசிக் கொண்டிருந்ததைக் கண்ட ஃப்ராங்லின், அந்தக் குழந்தையைப் பார்த்து, அதோ அந்தச் சூரியனை நேரடியாக நின்று பார் என்றார்.

அந்தக் குழந்தை, அவர் கூறியதைப் போல பார்த்திட வானத்தை இமைக் கொட்டாமல் நின்று பார்க்க முயற்சித்தும்; முடியவில்லை. கண்களை அந்தக் குழந்தை தனது இரு கைகளாலும் மூடிக்கொண்டது. "என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை. சூரிய ஒளியால் என் கண்கள் கூசுகின்றன என்று குழந்தை கூறியது.

ஃப்ராங்லின் குழந்தைக்குப் பதிலளித்தபோது, "நம்முடைய கண்களால் நாம் கடவுளைக் காண முடியாது. அவர் எல்லையற்ற