பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் என்ற இந்த நூல், அறிவியல் ஆற்றி வரும் அற்புத விவரங்களை விளக்கும் புத்தகமாகும். வானவூர்தி, இரயில் போக்குவரத்து, கப்பல் கண்டுபிடிப்பு, அஞ்சல் துறை, தந்தி, நிழற்படம், சினிமா, கடிகாரம் கண்டுபிடிப்பு வளர்ச்சிகள், மருத்துவமேதைகளது மருந்தியல் விஞ்ஞானம் வளர்ந்த சரித்திரங்கள், தாவரவியல், மின்னியல், கணக்கியல், வானியல், மண்ணியல் மாண்புகளின் அற்புதங்கள், நோயினால் நொந்து வாழ்ந்து கொண்டே சாதனையைப் படைத்த அறிவுத் துறைச் சான்றோர்களின் வாழ்வியல் வரலாறுகள் அனைத்தையும், சுருக்கமாக ஓரளவு விளக்கிக் கொண்டிருக்கும் நூலாக இது திகழ்ந்துக் கொண்டிருப்பதை. இதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டு வருபவர்களாலே உணர முடியும்.

எந்தெந்த அறிவியல் துறை வித்தகர்கள் - எதெதைக் கண்டுப்பிடித்தார்களோ, அதற்கான அவர்களது திருவுருவங்களையும் வெளியிட்டு அவர்களுக்கு நன்றி காட்டியுள்ளது இந்த நூல்.

இந்த மேதினி வாழ்ந்திட அரும்பாடுபட்டு அறிவியல் விந்தைகளைக் கண்டுபிடித்த அந்தத் மேதைகளின் திருவுருவங் களையும், சம்பவப் படங்களையும், ஆங்கிலப் பத்திரிகைகளிலே இருந்து எடுத்ததற்கு அடிப்படைக் காரணம், அந்த தியாக சீலர்களின் உழைப்புகளுக்கு மரியாதை காட்டி, மதிப்புக் கூட்டி, நமது நன்றியுணர்ச்சியை அஞ்சலியாகச் செலுத்தத்தான் அவற்றை வெளியிட்டுள்ளோம்.

அவர்கள் இந்த அவனிக்கு ஆற்றிய நன்றிக் கொடைகளை நாம் மறந்தால், நாமும் - நமது நாடும் - நமது சந்ததியும் அவர்களது நன்றியைக் கொன்றவர்களாகி விடுவோம் அல்லவா? எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; செய்நன்றி கொன்றார்க்கு ஏது உய்வு?

பத்திரிகைகளில் வெளிவந்த அவர்களது கண்டுபிடிப்புச் சம்பவங்கள், சரித்திரங்கள், வரலாறுகள், திருவுருவங்கள் அத்தனையும் பொது மக்கள் சொத்து. அவை யாருக்கும், எவருக்கும் தனிப்பட்ட உரிமையுடையதல்ல: அவற்றைத் திரட்டி வெளியிடுவதும்கூட, உலக மக்கள் உணர்வுகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஒரு தொண்டு தானே! என்பதால், பல பத்திரிகைகளிலே இருந்து திரட்டினோம்; சேகரித்தோம்; தொகுத்தோம்; வெளியிட்டோம்.

திரட்டியதை எல்லாம் மக்களுக்கு இலவசமாக அச்சிட்டு வழங்கிட நாம் என்ன இராஜா ராம் மோகன் ராய் அல்லவே! அவருக்கும்கூட ஒரு பொது நோக்கு இருந்தது. அதாவது, வேதங்கள், உபநிடதங்கள், ஆகம, சாஸ்திரங்களில் இறைக்கு உருவ வழிபாடுகள் கிடையாது. விக்கிர

iV