பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அங்குரம்

15

அச்சுக்கோப்பு



அங்குரம்- முளை, முளைக்குருத்து. Sprout, the bud of a plant.

அங்குரார்ப்பணம் - தொடக்கம், beginning, அது நல்ல தொடக்கம். It is a good beginning.

அங்குஸ்தான் - விரல் உறை, thimble, தைக்கும் போது பாதுகாப்பிற்காக விரலில் அணிவது. Worn at the tip of a finger for protection while stitching.

அங்கே - அங்கு, there. அங்கே அவனைப் பார்க்கலாம். You can find him there.

அங்கை எலும்பு - உள்ளங்கை எலும்பு, Palm bones,

அங்கைக் கூட்டிலை - உள்ளங்கை வடிவக் கூட்டிலை. Palmately compound leaf.

அங்ஙனம் - அவ்வாறாக, in that way. அங்ஙனமே செய்த. Do it in that way.

அச்சகத் தொழிலாளி - அச்சுக் கூடத்தில் வேலை செய்பவர். Printing press worker.

அச்சகம் - அச்சுக்கூடம், Printing press. அச்சு வேலை நடைபெறும் இடம். The place where printing Work is done,

அச்சடிச் சேலை - அச்சடித்த புடவை. Printed saree in various designs.

அச்சம் - பயம், fear. அச்சம் தவிர். Have no fear,

அச்சயன் - அச்சம் நீங்கியவனான கடவுள் God, the Fearless.

அச்சன் - தந்தை, father. அவர் என் தந்தை. He is my father.

அச்சாணி - மைய ஆணி, linchpin, axle. விலைகளைக் கட்டுப்படுத்துவது அரசுக் கொள்கையின் அச்சாணியாகும், Controlling prices is the linch pin of a Government's policies.

அச்சாரம் - முன்பணம், advance earnest money. கொஞ்சம் முன்பணம் கொடு, Pay some advance.

அச்சிடல் - அச்சுப் பதிவு செய்தல், printing. Printing is fine.

அச்சிடுவோர் - நூல்களை அச்சிடுபவர், printer. One who prints books. ஒ. வெளியீட்டாளர்.

அச்சியற்றி - அச்சைப் பதிவு செய்யுங்கருவி, ஆள், printer. One who or that which prints. He is a printer. A printing device attached to a computer.

அச்சு - நேர்க்கோடு, axis, புவியச்சு, வட்ட அச்சு, செங்குத்து கிடையச்சுகள், the axis of the earth, the axis of a circie, the horizontal and Vertical axes.

அச்சு - அச்செழுத்து, printing type. அழகான அச்செழுத்துகள் Fancy printing types.

அச்சு- பதிவு, Impression. அச்சுப் பதிவு நன்று. The impression is good.

அச்சு - கடவுள், இறைவன். God, the Almighty.

அச்சு - நெசவாளர் கருவி, weavers reed.

அச்சு இயந்திரம் - அச்சடிக்கும் கருவி, printing machine.

அச்சு உருளை- அச்சடிக்கப் பயன்படும் உருளை. printing barrel or cylinder.

அச்சுக்கூடம் - அச்சடிக்கும் இடம், printing press, house.

அச்சுக்கோப்பாளர்- அச்சு எழுத்துகளைக் கோப்பவர். compositor, one who composes.

அச்சுக்கோப்பு - அச்சு எழுத்துக் களை வரிசையாக அடுக்கல்,