பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262 மாணிக்கவாசகர்



இதுவே அத்துவிதசித்தி என்றும்,வீடுபேறு என்றும் இயம்பப் பெறுகின்றது.”

இந்த விளக்கத்தின் ஒளியில் மணிவாசகரின் திருப்படை ஆட்சி என்னும் இப்பனுவலை நோக்குதல் வேண்டும். இதிலுள்ள எல்லாப் பாடல்களும் இந்த உண்மையைத்தான் வெவ்வேறுவிதமாக விளக்குகின்றன. பேரின்பப் பெருங் கூத்தப் பெருமானுடைய திருக்காட்சியில் ஆழ்ந்து அவ் வண்ணமாய் நின்றருளிய அடிகள் விழுமிய முழு முதல்வனாகிய அவன் வெளிப்பட்டு மேலோங்குங்கால் தம் புறச் செயல்கள் தாமே கழன்று சிவப் பேரின்ப நிறைவாய்த் தாம் நிற்கும் அருளிப் பாட்டினைப் பாடல்களில் ஒதியருள்கின்றார். அதாவது சிவபோதத்தில் சீவபோதம் கரையுங்கால் நிகழ்வன தெரிவிக்கப்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலிலும் கழலப்பெறும் செயல்கள் தெரிவிக்கப்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலிலும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைக் காட்டுவேன். பாடலில் வரும் ஆகாதே’ என்ற சொல் 'அன்றே' என்னும் சொல்லுப் போன்று 'அல்லவா' என வினவும் குறிப்புடைய இடைச் சொல்லாகும்.

                பாடல்-1 
  கண்கள் இரண்டும் அவன்கழல்
     கண்டு களிப்பன ஆகாதே (அடி. 1)

பொருள்: கண்கள் மட்டுமல்லாது, பிரபஞ்சத்தை நுகர்தற்கென்றே அமைந்துள்ள பஞ்சேந்திரியங்கள் பரபோதத்தில் செயலற்றுப் போகின்றன.

விளக்கம் : தூய மனம் படைத்திருக்கும்பொழுது தெய்வ தரிசனம் ஊனக்கண்கள் வாயிலாகப் பக்தனுக்கு நிகழ்தல் சாத்தியம். மாணிக்கவாசகருக்கு அவ்வாறு


6. சித்பவாநந்த அடிகள் : திருவாசகம் பக். 839.84).