பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

அனுப்பப்பட்டது. அவ்விழாவிற்குச் செல்ல அன் பரும் விழைந்தார். அதற்குத் தம் அன்புடை மனைவியையும் உடன்வர அழைத்தனர். அதுபோது அவர்தம் மனைவியார் தாம். வர இயலாது என்று கூறியதால் தாம் மட்டும் போவதாகப் புறப்படு கையில் நீரும் போதல் ஒண்ணுது, என்றனர் மனேவியர். அதல்ை சினம் உற்ற கணவர் நீதான் வர நினைத்திலேயேல் நான் ஏனே போதல் அடாது?’ என்று வினவ, அக்காலே அக்கற்புடைக் காரிகையார் கழறியதுதான் கற்பு மேம்பாட்டிற்குப் பொறுப் புடைய சான்ருகும்.

அன்புக்குரிய ஆருயிர்க் கணவரே, சித்திரங் கள் நிறைந்த புது மனையாதலின், ஆண்பாலர் உருவம் பல சுவரினே அலங்கரித்து நிற்கும். அவற் றைப் பார்க்க யான் மனங்கொள்ளேன். இதுவே நான் வாராமைக்குக் காரணம், என்றனர். அது கேட்ட கணவனுர் தம் இல்லக்கிழத்தியாரின் கற்பின் மேம்பாட்டை எ ண் ணி இறும்பூதுற்ருர், நீ கூறியது முற்றும் நேரியதே. ஆளுல், யான் சென்று மீள என்னே ஏன் தடுக்கின்றனே ? இதற்கும் ஏதேனும் ஏது உண்டோ? அதயுைம் இயம்பின் ஏற்கலாம், என்றனர்.

அவ்வம்மையார், ஆடவர் உருவினை அழகுறத் தீட்டிய ஓவியர், பெண்டிர் வடிவையும் எழுதி யிராரோ? அவ்வடிவழகில் நீர் ஈடுபட என் உள்ளம் விழைந்திலது. ஆதலின், நீரும் செல்லல் இயலாது என்றேன். இதுவே காரணம், என்று