பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

யார் உண்மைத் துறவுடையராய் நடு நாட்டின் நாயகமாய் விளங்கும் திருவீரட்டானம் என்னும் திருப்பதியை அடைந்தார்.

அவர் கடுங்கதிர்ச் செல்வன் கடலிடைத் தோன்றுதற்கு முன் எழுந்திருப்பார்; திருவலகு கொண்டு திருத்தளியைக் (கோவில்) கூட்டித் துாசு போக்குவார்; ஆமயத்தால் ஆலயத்தை மெழுக்கிடு வார்; மலர் பறித்து மாலை தொடுத்து மாதொரு பாகரை (சிவபெருமானே) வழிபடுவார். இம்முறை யில் நாள் தவருது திருத்தொண்டு செய்து வந்தார். இதுவன்றே உள்ளத்துறவு, உண்மைத் துறவு! இதனை எவரும் இயற்றலாம் அன்றே ? இதற்கு மழித்தலும் நீட்டலும் வேண்டுமோ ? நாடு கடந்து காடு புகவேண்டுமோ ? மனத்தின்கண் மாசிலராய்,

என்க டன்பணி செய்து கிடப்பதே '

என்று தம் கடமையைச் செய்து வரின்,

கின்க டன் அடி யேனையும் தாங்குதல் என்பது தானே பெறப்படும் அன்ருே? இவ்வாறு பன்ளுைம் திலகவதியார் பரமரை வழிபட்டு வந் தனர்.

திலகவதியார் இறைவரிடம் தமக்காக எதுவும் வேண்டாது,

கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி. விடும் வேண்டா விறலின் விளங்கினர்." ஆயினும், தம் இளவல் சைவ சமயம் விட்டுச் சமண சமயம் புகுந்தமைக்கு மட்டும் மனம் புழுங்கினர்;