பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மா தவம் புரிவாள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஒத்த பொருள் உடையனவே. சூல் என்றால் சூலம் என்னும் படைக் கருவி. அதன் வடிவம் வெற்றிலை போன்றிருக்கும். திரிசூலம் என்பதில் மூன்று கூறுகள் இருக்கும். இருபக்கங்களிலும் இருப்பவை சிறிய கூர் முனைகளாகும். நடுவில் இருக்கும் பகுதி வெற்றிலை வடிவாயிருக்கும். ஆகச் சூலம்போல் வெற்றிலை யிருப்பதால் குல்' என்பதை உவமையாகு பெயராகப் பெற்றுள்ளது. சூல் என்பதற்குச் சூலம் என்னும் பொருள் உண்மைக்கு இலக்கியச் சான்று: 'குலிசம் கதை சூல்' (சேதுபுராணம் - தேவிபுர - 27) சூலினி என்பது உமாதேவியின் பெயர்களுள் ஒன்று. குலத்தை ஏந்தியிருப்பதால் உமைக்குச் சூலினி என்னும் பெயர் ஏற்பட்டது. அபிராமி அந்தாதியில் உள்ள 'வாயகி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆய கியாதி யுடையாள் சரணம் அரண் நமக்கே’’ (50) என்னும் பாடல் பகுதியில் சூலினி என்னும் பெயர் உள்ளமை காணலாம். வெற்றிலை சூலம்போல் இருக்கிற தல்லவா? சூலம் போன்ற இலையையுடைய வெற்றிக் கொடி சூலினி எனப் பெயர் வழங்கப்பட்டது. கணிச்சி என்பதும் சூலம் போன்றதொரு படைக் கருவியே. இதனை மழு என்றும் கூறுப. இது சிவனது படைக்கலமாகும். புறநானூற்றில் உள்ள ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்' (56-1,2)