பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மா தவம் புரிவாள் களாம். இதனை, லார்டு டென்னிசன் (Lord Teunyson) என்னும் ஆங்கிலப் பாவாணரின் The Lotos - Baters' என்னும் தலைப்புடைய பாடலில் காணலாம். “They sat them down upon the yollow sand, Between the sun and moon upon the shore” (5:1,2) groug Liti di Ló6). “Between the sun and moon' என்னும் பகுதியால், ஒரே நேரத்தில் ஒரு பக்கம் ஞாயிறை யும் இன்னொரு பக்கம் திங்களையும் காண முடிகிறது என்பது புலனாகும். தமிழ்ப் புலவர்கள் ஆழியாகவும் சங்காகவும் தோடுகளாகவும் செய்த கற்பனைச் சுவையை ஆங்கிலப் பாடலில் காண முடியாவிடினும், எடுத்துக் கொண்ட கருத்து காணப்படுகிறது. பயணத்தின் பயன் இவண் இவ்வளவு நெடுந் தொலைவு வழி கடந்து பயணம் செய்து வந்த காரணம்: இரவிலேயே இன்னும் சில விண்மீன்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில்புதுப்புது விண்மீன்கள் காலந்தொறும் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பகலிலே ஞாயிறு, திங்கள் என்னும் இரு கோள்கள் ஒரே நேரத்தில் தெரிவதன்றி, பகலிலேயே விண் மீன்களும் தெரியும்; அவ்வாறு தெரியவைக்கும் ஆற்றல் பொன்னாங் கண்ணிக் கீரைக்கு உண்டு என்று கூறுவது மிகவும் வியத்தகு செய்தி எனச் சுட்டிக் காட்டுதலே யாகும். தொடக்கப் புள்ளி நம் நாட்டுச் சித்தர் யாரேனும் பொன்னாங் கண்ணி போன்றவற்றின் உதவியாலும் தம் சித்தின் ஆற்றலாலும் பகலில் விண்மீண்களைப் பார்த்திருப்பரோ என்னவோ தெரியவில்லை. பகலில் விண்மீனைப் பார்த்தல் - பகல்