பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 173 மதங்கள் தொடர்பான புராண-இலக்கியங்களை ஆய்ந்து படிக்கும் காலம் இது. எனவே, பயிற்சி வாயிலாக எம் மதத்தினரும் இந்துமதப் புராணக் கதைகள் தொடர்பான பெயர்களின் பொருள்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்து மதத்திற்குள்ளும், சைவம் தொடர்பான பெயர்களும் வைணவம் தொடர்பான பெயர்களும் இடம் பெற்றிருப்ப தால், சைவ - வைணவக் காழ்ப்புக்கும் இடமில்லாமற் போகலாம். 4.5. சில வழிமுறைகள் சொல் விளையாட்டுப் பெயர்கள், ஒப்புமைப் பெயர்கள், சார்புப் பெயர்கள், வடிவப் பெயர்கள் முதலியவற்றைப் பட்டறிவு வாயிலாகவும் பிறர் வாயிலாகவும் அறிந்து சுவைக்கலாம். பயன் பெயர்களின் உதவியால், சில சரக்குகளைத் தனியாகப் பயன்படுத்தியும், சில சரக்குகளுடன் வேறு சில சரக்குகளைச் சேர்த்துப் பயன்படுத்தியும் நன்மை பெறலாம். போதிய பயிற்சியிலாதார் பிறர் அறிவுரையை நாடலாம். ஒப்புமைக்கலை மர இனங்கட்கு இடப்பட்டுள்ள பெயர்களுள் ஒப்புமைப் பெயர்கள் மிகவும் சுவை பயந்து ஒரு கலையாகத் தோன்று வதைக் காணலாம். சொல் விளையாட்டு - வேடிக்கைப் பெயர்கள் சிலவற்றிலுங்கூட, சார்புப் பெயர்கள் சில வற்றிலுங்கூட" வடிவ (உடற்கூறு) - நிறப்பெயர்கள் சில வற்றிலுங்கூட, ஒப்புமைக் கலை இழையோடியிருப்பதை யறியலாம். மர இனங்கட்குத் தரப்பட்டுள்ள ஒப்புமைப் பெயர்களுள் தெய்வப் பெயர்களும் புராண-இதிகாசக் கதை உறுப்பினர் பெயர்களும் குறிப்பிடத்தக்கன.