பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 71 7. இராமர் பச்சை: இலைப் பச்சை, கிளிப் பச்சை, இராமர் பச்சை என்றெல்லாம் பச்சை நிறத்தை வகைப்படுத்துவ துண்டு. இவற்றுள் இராமர் பச்சையாகக் குப்பைமேனியின்நிறத்தைக் கொள்ளலாம். 3-3. மாங்களியான்: இப்பெயர் சா. சி. பி. அகர முதலியில் தரப்பட்டுள்ளது. 'மா' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பல்வேறு பொருள்களுள், கருமை, மாமரம் என்ற இரு பொருள்களும் அடங்கும். மாங்கரியான் என்ற பெயருக்குக் கரிய கரியான் என்று பொருள் செய்ய முடியாது. அதாவது 'மா' என்பதற்கு, இங்கே, கருமை என்னும் பொருள் பொருந்தாது. எனவே, மாமரம் என்னும் பொருளே பொருந்தும். இங்கே, மா என்பது ஆகு பெயராக, மாமரத்தின் நிறத்தைக் குறிக்கிறது. உலகியலில், நல்ல நிறமாய் இருப்பவரைச் சிவப்பாய் இருக்கிறார் என்றும், கருநிறம் உடையவரைக் கறுப்பா யுள்ளார் என்னும் இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம் உடையவரை மாநிறம் உடையவர் என்றும் கூறல் மரபு. எனவே, இவண், மாங்கரியான் என்பதற்கு மாநிறக் கருமை அதாவது மயிலை என்பது போல் வெளிர் கருமை உடையது எனப் பொருள் கொள்ளவேண்டும். மயிலை என்பதற்கு உரிய விளக்கங்கள் இதற்கும் பொருந்தும். மயிலம், மயில மேனி, மயிலை மேனி, மாங்கரியான் ஆகிய பெயர்கள் நிறத்தால் பெறப்பட்டவை யாகும்.