உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இணைப்பு. மாநில சுயாட்சி பற்றியும் ராஜமன்னார் குழு அறிக்கை வற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகள் (1974) இந்தியாவின் ஒருமைப்பாட்டினையும் இறையாண்மையினை யும் ஒங்குறச் செய்வதில் தனக்குள்ள திடமான உறுதிபாட்டினைத் தமிழ்நாடு அரசு அழுத்தமாக அறிவித்துக்கொள்கிறது. மேலும் நாட்டில் பொருளாதார, சமூக முன்னேற்றம் விரைவில் ஏற்பட வேண்டுமானால், உண்மையான கூட்டாட்சி முறையிலே நாட்டின் அரசியலமைப்பு அமைவது அவசியமென்று இவ்வரசு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது. அரசியல் நிர்ணய சபையில், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் முன்மொழிந்து, 1947 ஜனவரி 22 ஆம் நாளன்று நிறை வேறிய வரலாற்று இலட்சியங்கள் பற்றிய தீர்மானத்தின் முக்கிய மான பகுதியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். "இப்போது பிரிட்டிஷ் இந்தியாவில் அடங்கியுள்ள ஆட்சிப் பகுதிகளும், இந்திய சமஸ்தானங்களாக உள்ள ஆட்சிப் பகுதி களும், இவற்றுக்கு அப்பாலுள்ள பிற பகுதிகளும், சுதந்திர இந்தியாவுடன் இணைவதற்கு இசையும் மற்றப் பகுதிகளும் சேர்ந்து இந்திய ஒன்றியமாக அமைதல் வேண்டும்; மேற்சொன்ன ஆட்சிப் பகுதிகள் தற்போதுள்ள எல்லைகளு டனோ, அரசியல் நிர்ணய சபை வரையறுக்கும் எல்லைகளுடனோ, பின்னர் அரசியலமைப்புச் சட்டத்திற்கிணங்க ஏற்படும் எல்லை களுடனோ சுயாட்சி பெற்ற மாநிலங்களாக விளங்கி எஞ்சிய அதிகாரங்களுடன் (Residuary powers) அரசாங்க நிர்வாக அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டிருத்தல்வேண்டும். ஒன்றிய அரசுக்கென்று ஒதுக்கப்படும் அல்லது அந்த அரசினைச் சார்ந்து நிற்கும் அதிகாரங்கள் ஒன்றிய அரசுடன் இயைந்துள்ளதும் பொதிந்துள்ளதுமாக உள்ள அதிகாரங்கள் இவை மட்டுமே மாநிலங்களுக்கு இருப்பதில்லை." இந்திய நாடு பல்வேறு மொழிகளையும் பண்பாடுகளையும் வர லாற்றுச் சிறப்புக்களையும் கொண்ட மக்கள் வாழும் மிகப் பெரிய நிலப் பரப்பாகும். அதன் மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனித தேவைகளும் பிரச்சினைகளும் உள்ளன. எனவே, மாநிலங் இடையீடுகள் ஏதுமின்றிச் செயல்படுவதுடன், நாட்டின் கள்