உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 திட்ட ஆணைக்குழு. திட்ட ஆணைக்குழுவானது, மைய நிர்வாகக் கட்டுப்பாட் டிலோ அல்லது அரசியல் கட்சிச் சார்புள்ளதாகவோ இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும் ஓர் அமைப்பாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை எய்த, திட்ட ஆணைக்குழுவினை நிறுவ வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு அது சட்டப்படி அமைதல் வேண்டும். சட்டப்படி அமைக்கப்படும் திட்ட ஆணைக்குழுவில் பொரு ளாதார, அறிவியல், தொழில் நுட்ப மற்றும் வேளாண்மைத் துறை வல்லுநர்களும் பிற வகை தேசிய பணியைச் சேர்ந்த வல்லு நர்களும் மட்டுமே இடம் பெற வேண்டும். (இந்திய அரசைச் சேர்ந்த அமைச்சர் எவரும் அதில் இடம் பெறலாகாது. இது தொடர்பாக இயற்றப்படவிருக்கும் சட்டத்தில், திட்ட ஆணைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம், பணி நிபந்தனைகள் ஆகிய வற்றிற்கு வகை செய்யப்படல் வேண்டும். இந்த திட்ட ஆணைக் குழுவிற் கென்று தனியே ஒரு செயலகம் இருத்தல் வேண்டும். தற் போதுள்ள திட்ட ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும். திட்ட ஆணைக்குழுவின் பணி, மாநிலங்கள் உருவாக்கும் திட்டங்கள் குறித்து அறிவுரை வழங்குவதாக இருத்தல்வேண்டும். மாநிலங்களால் அல்லது மாநிலங்களில் தொடங்கப்படும் தொழில் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு அன்னியச்செலாவணி வழங்குவது தொடர்பாக, நிதி ஆணைக் குழுவினால் பரிசீலிக்கப்படு வதற்கு பரிந்துரைகள் செய்ய வேண்டியதும் இதன் பொறுப் பாகவே இருக்கும். நிதி ஆணைக்குழு மானியங்களுக்குப் பரிந்துரை செய்கையில், திட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனக்கென ஒரு திட்ட வாரியத்தை அமைத்துக் கொள்ளலாம். திட்டமிடுதலும், வளர்ச்சியும் 1951-ஆம் ஆண்டு தொழில்கள் (வளர்ச்சியும் ஒழுங்கு முறை யும்) சட்டம் (மத்தியச் சட்டம் 65/1951) ரத்து செய்யப்பட வேண்டும்.