உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 ஆட்சிப் பகுதியிலுள்ள கடற் படுகை ஒரு மாநிலத்தை ஒட்டி அதன் ஆட்சிப் பகுதியான கடலின் கீழே உள்ள நிலங்கள், கனிப் பொருள்கள், விலை மதிப்புள்ள பிற பொருள்கள் யாவும் அந்த மாநிலத்திற்கே உரியனவாகும் வகை யில் பிரிவு 297 திருத்தப்படவேண்டும். மைய நிர்வாகத் துறை. நாடாளுமன்ற முறைக்கும், அது சம்பந்தப்பட்ட அனைத்து முறைகளுக்கும் ஏற்றதாய், நாட்டின் பல்வேறு வட்டாரங் களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறும் வகையில், மைய அமைச்சரவை அமையும் வகையில் மரபுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்; அமைச்சரவைத் தரம் உள்ள மைய அமைச்சர்களின் எண்ணிக்கை, எந்த ஒரு தனி மாநிலத்தைப் பொறுத்த வரையி லும் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேற்படக் கூடாது. மைய, மாநில உறவு குறித்துப்பரிசீலிக்க நிர்வாகச் சீர்திருத்த ஆணைக் குழுவால், திரு. எம். சி. செதல்வாட் அவர்களின் தலைமை யில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு, மாநிலப் பட்டியல்கள் பொதுப் பட்டியல்கள் விவகாரங்களைக் கவனிக்கின்ற மைய அமைப்புகளின் பணி பற்றி ஒரு முழு அத்தியாயத்தில் விளக்கி உள்ளது. ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின்படி, வேலை இனங் கள் மாநிலங்களுக்கிடையே பரவலாக்கப்பட வேண்டும். மைய அரசு வழிகாட்டியாகவும், திட்ட ஆலோசகராகவும், பணி மதிப் பீட்டாளராகவும், அமைதல் வேண்டும். மாநிலப் பட்டியலின் வரம்பிற்குள் வருகிற பொருள்களைப் பொறுத்தமட்டில் மைய அமைச்சகங்கள், மையத் துறைகள் ஆகியவற்றின் பணி குறைக்கப் பட வேண்டும் என்று நிர்வாகச் சீர்திருத்த ஆணைக்குழு பரிந் துரைத்துள்ளது. மாநிலப் பட்டியலின் கீழ்வரும் எப்பொருளைக் குறித்தும் பரிசீலிப்பதற்காக மையத்தில் தனி அமைச்சகமோ, துறையோ இருக்க வேண்டிய தேவை இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம். அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு விதித்துறை சம்பந் தப்பட்டதாய் இருப்பினும், அதில் செய்யப்படும் ஒவ்வொரு திருத்தமும் அனைத்து மாநிலங்களாலும் ஏற்புறுதி பெற வேண்டும்.