உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்நூல் ... தி.மு.கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து, முதலமைச்சர் என்கிற பொறுப்பில் முதன் முதலாக 17-3-1969 அன்று இந்தியத் திருநாட்டின் தலைநகராம் டெல்லிக்குச் சென்றார். அப்போது. அனைத்திந்தியாவையும் சார்ந்த ஐம்பதுக்கும் மேலான பத்திரிக்கை நிருபர்கள் அவரைச் சூழ்ந்து துருவித் துருவிக் கேள்விகளைக் கேட்டுப் பதில் பெற்றனர். சங்ககாலத் தமிழ் இலக்கியத்திலிருந்து சங்கு குளிக்கும் தொழிலாளர் பிரச் சினை வரை, இருமொழித் திட்டத்திலிருந்து கரும்பு உற்பத்தி இலக்குவரை, இந்தித் திணிப்பை எதிர்ப்பதிலிருந்து இந்திராகாந்தி தலைமைச் சிறப்புவரை அத்தனைக் கேள்விகளையும் பத்திரிகை யாளர்கள் கேட்டனர். அனைத்துக்கும் தலைவர் கலைஞர் பதிலளித்து முடித்து இறுதி யாக ஒரு முக்கியமான அறிவிப்பையும் அப்போது வெளியிட்டார். தி.மு. கழக அரசு தகுதி மிக்கவர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கும் என்றும், அந்தக் குழு மத்திய - மாநில உறவுகள் பற்றியும்; மத்திய அரசாங்கத்திலிருத்து மாநில அரசுகளுக்கு எந்தெந்த அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும் என்கிற பரிந் துரையையும் அளிக்கும் என்றும் அறிவித்தார். சட்டவல்லுநர்கள் அரசியல் சட்ட மேதைகள் கல்வித் துறையில் புகழ் வாய்ந்தவர்கள் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் கலைஞர் குறிப் பிட்டார். கலைஞர் அவர்கள், புது டெல்லியில் 17-3-1959 அன்று பத்திரிகையாளர்களிடம் அறிவித்ததற்கு ஏற்ப, திரு.பி.வி.இராசமன்னார், (தமிழ் நாடு உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) குழுத் தலைவராகவும், திரு.ஏ. லட்சுமணசாமி முதலியார் (சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர்) திரு. பி. சந்திரா ரெட்டி (உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டதாகவும் ஒரு குழு 1969 செப்டம்பர் திங்களில் அமைக்கப்பட்டது.