உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொதுப்பட்டியல் (1) அப்படியே வைத்துக்கொள்ளப்படும் சட்டமியற்றும் அதிகாரங்கள். பொதுப் பட்டியலில் சட்டமியற்றும் அதிகாரங்கள் சம்பந்த மான பின்வரும் பதிவுகள் அப்பட்டியலில் அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும், தடுப்புக் காவல் கைதிகளையும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லுதல். மனிதர்கள், விலங்குகள் அல்லது பயிர்கள் தொடர்பான தொற்று நோய்கள் அல்லது எளிதில் பரவக்கூடிய நோய்கள் அல்லது பயிர் நோய்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பரவுவதைத் தடுத்தல். அகதிகள் சொத்து என்று சட்டப்படி அறிவிக்கப்பட்ட சொத் துக்களைப் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுதல், நிர்வகித்தல், முடிவு செய்தல். இந்தியா பாகிஸ்தான் நாடுகள் அமைக்கப்பட்டதன் காரண் மாக தாம் வசிக்குமிடத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களுக்குப் புதுவாழ்வு அளித்தல். பொதுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் ஏதேனும் ஒன்றின் நோக்கத்திற்காக விசாரணைகள், புள்ளி விவரங்கள். பொதுப் பட்டியலில் கண்டுள்ள பொருள்களில் ஒன்றின் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் நீங்கலாக, எல்லா நீதிமன்றங் களின் அதிகார வரம்பும், அதிகாரங்களும். பொதுப் பட்டியலில் கண்டுள்ள பொருள்களில் ஒன்றின் தொடர்பாகக் கட்டணங்கள்; ஆனால் ஒரு நீதிமன்றத்தில் வசூலிக் கப்படும் கட்டணங்கள் இதில் அடங்கா.