உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலைஞர் பேருரை: மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இடத்தைப் பெறப்போகும் சிறப்புமிக்க தீர்மானத்தை நமது தமிழ் நாடு சட்டப் பேரவையில் முன்மொழிகிறபேறு பெற்றமைக்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சிந்தனைச் செல்வம் மிகுதியாகப் பெற் றுள்ள இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள், இந்தத் தீர்மானத்தின் நல்லநோக்கத்தை ஆய்ந்துத் தெளிந்து, தங்கள் பேராதரவை நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் வலிவும் பொலிவும் கெடாமலிருக்கவும், ஒருமைப் பாட்டுக்கு ஒரு துளி தீங்கும் நேராமல் இருக்கவும் தன் பங்கு எப் போதும் உண்டு என்று சூளுரை மேற்கொண்டு, அதனைச் செயல் வடிவிலும் பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது, இன்றைய ஆளுங்கட்சியான தி. மு. கழகம் என்பதை அனைவரும் அறிவர். 1962ம் ஆண்டில் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதும், சீன ஆக்ரமிப்பின்போது அந்த எதிரிகளை நோக்கிப் போர் முழக் கம் சய்த பாடி வீடுகளில் ஒன்றாக இருந்ததும், பாகிஸ்தான் போக்கு முறியடிக்கப்பட இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களை யும் முந்திக்கொண்டு ஆறு கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்தின் சார்பில் போர் நிதி வழங்கியதோடு, போர் முனையில் நிற்கும் உணர்வுடன் வெற்றிக்கான வீரப் பணிகளைப் புரிந்ததும்-இன் றைய ஆளுங்கட்சியான தி. மு. கழகத்தின் நாட்டுப் பற்றுக்குச் சான்றுகளாகும். தேவையற்ற ஐயப்பாட்டுப் பின்னணியினூடே இந்தத் தீர் மானத்தின் நோக்கம் பற்றி சிந்தித்திட வேண்டாம் என்பதற்கே இவைகளைக் குறிப்பிட்டேன். இந்திய நாட்டில் கூட்டாட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, 1945-ஆம் ஆண்டு இந்திய மக்கள் முன் வைத்த தேர்தல் பிரகடனத்தில் தெளிவாகக் குறிப் பிட்டிருக்கிறது. "இந்தியக் கூட்டாட்சி என்பது, அதன் பல்வேறு பகுதிகளின் விரும்பி இணையும் ஒன்றியமாக இருக்கவேண்டும். பகுதி களுக்கு (அதாவது மாநிலங்களுக்கு) அதிகபட்ச சுதந்திரம் அளிப்பதற்காக எல்லோருக்கும் பொதுவான, முக்கிய அதி