உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மாநில உரிமைகள் நசுக்கப்படாமல் பாதுகாத்திடவும், பொரு ளாதார வளம் ஒருசீராக எல்லா மாநிலங்களுக்கும் அமைவதற் கான திட்டம் மேற்கொள்ளப்படவும் தி.மு. கழகம் பொறுப்புடன் பணியாற்ற உறுதி கொண்டிருக்கிறது. மாநில உரிமைகளைப் பாதுகாத்திடும் முறையிலும், குறிப் பிடப்படாத எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers) மத்திய சர்க்காரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முறையை மாற்றி, அவை மாநிலங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதற்காகவும் கழகம் பாடுபடுவதுடன், அந்த நோக்கத்துடன் இந்திய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்பு கிறது". மாநிலங்கள் மத்திய அரசை அண்டி நிற்கும்நிலை களையப்பட வேண்டுமென்ற கருத்தைச் சுட்டிக்காட்டி, அறிஞர் அண்ணா. அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்தபோது 1967.68ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கீழ்கண்டவாறு சுட்டிக் காட்டினார்:- "நமது கூட்டாட்சி அமைப்பில் (Federal set up) எத்தகைய வரம்புகளுக்கு உட்பட்டு மாநில அரசுகள் இயங்க வேண்டி யுள்ளன என்பதை நாட்டத்திற்கொள்ளுதல் வேண்டும். அரசியல் அமைப்பில் விதித்துறைகள் மத்திய அரசுக்கு ஊட்டங்கொடுக்கும் முறையிலே அமைந்திருப்பது ஒருபுறமிருக்க, கடந்த பதினைந்து ஆண்டுகளாக திட்டமிட்ட பொருளாதார அமைப்பின் கீழ் எழுந்த நெறிமுறைகளும், வளர்ந்த மரபுகளும் மாநிலங்களை மெலியச் செய்து மத்திய அரசினை மேலும் வலுவூட்டும் போக்கில் நாணயச் செலா அமைந்துள்ளன. அயல்நாட்டு வாணிபம். வணிக் கொள்கை, கடன் கொள்கை, முதலியன குறித்து, அரசிய லமைப்பில் வகை செய்துள்ள அதிகாரங்களின்கீழ், நமது பொரு ளாதாரம் முழுவதையுமே நெறிப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிற்கே உரியதாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பில் குறிப்பிட்டுக் கூறப்படாத எஞ்சிய வரி விதிப்பு அதிகாரங்கள் (Residuary Powers) உட்பட, நீட்சித்திறன் பெற்ற வருமான இனங்களின்மீது மத்திய அரசிற்குள்ள உரிமை வாய்ப்பின் மூல தேசிய வருமான பெருக்கத்தின் பெருமளவு பங்கினை ஈர்த் செல்லும் நிலையிலே அது உள்ளது. இந்நிலைமை காரணம மாநிலங்கள் தங்கள் திட்டங்களையும் கொள்கைகளையும் நில வேற்றுவதற்கு மத்திய அரசின் விருப்பக் (Discretionary) கடன் களையும் உதவி மானியங்களையும் எதிர்நோக்கி நிற்கும் நிலையில்