பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 பேராசிரியர் ந.சஞ்சீவி முதலிய கிராமங்களை மீனாட்சித் தாயின் புஷ்பக் கட்டளைக்காகவும் மருதுபாண்டியர் விட்டனர் என்பர். பாண்டி நாட்டின் பழம்பெருங் கோவிலாகிய மதுரைக் கோவிலிலுள்ள கலியாண மண்டபமும் மருதரசர் கை வண்மையின் விளைவே என்றும் இம்மண்டபத்தில் காணப்படும் சிலைகளில் மருதரசர் குடும்பம் வடிக்கப்பட்டுள்ளது என்றும் இயம்புவர். 3. குன்றக்குடியில்: குன்றக் குடியில் கோயில் கொண்டுள்ள குமரவேள் மருது பாண்டியருக்குக் கண் கண்ட தெய்வம் அவருக்குற்ற பெரும்பிளவை நோயைத் தீர்த்து வைத்தது வைத்தீஸ்வரர். எனவே, அவர்பால் பேரன்புபூண்டொழுகிய மருதரசர் குன்றக்குடி மலைமேல் கோபுரமும் மண்டபங்களும் கட்டியுள்ளார். கோவிலுக்குத் தெற்கிலுள்ள மருதாபுரி என்னும் குளமும் அவர் பத்தியின் விளைவே. கோபுரமும் குளமும் கட்டிய மருதரசர், குன்றக்குடியில் ஆயிரம் தென்னை மரங்களைக் கொண்ட தோப்பு ஒன்றையும், ஆயிரம் மாமரங்கள் கொண்ட மற்றொரு தோப்பையும் அமைத்தார். திருவிழாக் காலங்களில் திருமுருகப் பெருமானுக்குச் சார்த்தப்படும் பொற்கவசத்தில் 'சின்ன மருது உபயம் என்ற செம்மைசான்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் குடி கொண்டுள்ள மயிலேறும் பெருமாள் மீது மருது பாண்டியர் விருப்பப்படி பாடப்பெற்ற சிறந்த தமிழ் இலக்கியமே மயூரகிரிக்கோவை. இக்கோவிலில் மருது பாண்டியர் சிலைகள் அழகொளிர அமைக்கப் பெற்றுள்ளன." கோவிலுக்குக் கிழக்கே கோபுரவாயிலுக்கு எதிராக இப்போது இடிந்துள்ள கட்டடங்கள் பழைய மருது பாண்டியர் அரண்மனையே. 4. சிவகங்கையில்: சீமையின் தலைநகரமாகிய சிவகங்கையிலும் மருதரசர் கட்டிய கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலின் பெயர் திருஞான சுப்பிரமணியர் கோவில் என்பது. நகருக்குக் கிழக்கே உள்ள இலட்சுமி தீர்த்தமும் அதை அடுத்துள்ள பூங்காவும் மருதரசரால் படைக்கப் பெற்றவையே. நெடுநாட்களாக வேலு நாச்சிக்குக் குழந்தை இல்லாமலிருந்து, முத்துவடுகரின் கடைசி நாட்களில் ஒரு பெண் மகவு பிறந்தது. ஆனால், அரசரின் மீளாப் பிரிவாலும் வேறு பல காரணங்களாலும் 'குழந்தை பிறந்தால் கோவில் கட்டுகிறோம்' என்று முத்துவடுகநாதரும் அவர் மனைவியும் செய்திருந்த பிரார்த்தனை தடைப்பட்டு விட்டது. இதை அறிந்த மருதரசர் இக்கோவிலைக் கட்டிச் சுண்ணாம்பூர் என்ற கிராமத்தை மானியமாக விட்டாராம். இவ்வுண்மை அறியாதார் இக்கோவில் கட்டிய வரலாற்றைப் பலவாறு திரித்தும் உரைப்பார். இக்கோவிலிலுள்ள முன் மண்டபத்தில் இடப்புறமுள்ள முதல் தூணில் (கொடி மரத்தருகில்) உள்ள கல்வெட்டு வருமாறு: 1801 ஆம் வருஷத்திற்குச் சரியான துன்மதி வருஷம், வைகாசி மாதம், 32 ஆம் தேதி சிவகங்கைச் சீமையின் ஆதீன கர்த்தாவாகிய