பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பேராசிரியர் ந.சஞ்சீவி விதந்தரு கோடி யின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும் சுதந்தர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே! என்று பின்னாளில் பாடினார் தேசீய கவி பாரதியார். அவர் கவிதையின் பொருளையே தங்கள் வாழ்வாக்கி, வாழ்ந்தும் மடிந்தும் அழியாப் புகழ் கொண்ட ஆண்மைச் சிங்கங்கள் மருது பாண்டியர்கள். வீரபாண்டியன் நடத்திய போர் சில வாரங்களே நடந்தது. ஆனால் மருது பாண்டியர் நடத்திய போரோ, பல மாதங்கள் நடந்தது. வீரபாண்டியன் நடத்திய போர் பெரும்பாலும் பாஞ்சைப் பதிக்குள்ளேயே அடங்கிவிட்டது. ஆனால், மருது பாண்டியர் நடத்திய போரோ, பல சதுர மைல் தூரம் பரவி, ஊர் மாறி ஊர், கோட்டை மாறிக் கோட்டை, காடு விட்டுக் காடு, எல்லை விட்டு எல்லை நடந்தது. எல்லா வகையாலும் வீரபாண்டியன் தொடங்கி வைத்த போரை, மாற்றான் பகைக்கு அஞ்சாது, காலந்தந்த வாய்ப்பால் அண்ணனினும் திறமையாகத் தம்பி ஊமைத்துரை நடத்திய போரை மருது சகோதரர்கள் ஊமைத்துரையின் உறுதுணையோடு சற்றேறக்குறைய ஐந்து மாதங்கள் இடையறாது நடத்தினார்கள். அப்போர்க் காலத்தில் அவர்கள் காட்டிய வீரமும், செய்த தியாகமும், பட்ட துன்பமும் கொஞ்சமோ விடுதலை வீரர்கள் இரவும் பகலும் போரிட்டார்கள் எண்ணற்ற வீரர்கள் பலியாவது கண்டு கண்ணிர் விட்டார்கள்; எவ்வாறேனும் வெற்றி பெறுவோம்! அயலாரை முறியடிப்போம்! அமைதி காண்போம்! எனத் துடித்தார்கள். ஆனால், அவர்கட்கு அமைதி வெற்றியால் கிட்டவில்லை - வீரச் சாவாலேதான் கிட்டியது. 'உலக வரலாற்றிலேயே இவ்வளவு ஆயுத பலம் நிறைந்த ஒரு கூட்டத்தை, ஆள் பலம் மட்டுமே கொண்ட ஒரு கூட்டம், இவ்வளவு வீரத்துடனும் திறமையுடனும் எதிர்த்துப் போராடியது எக்காலத்திலும் இல்லை, என்று வரலாற்று அறிவுடையோர் கூறும்படி செய்தனர் மருது பாண்டியர் முறத்தினால் புலியைக் காக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத் தாக்கி, உருளுக தலைகள் ஓங்குக மானம்' என்று போர் முரசு கொட்டிக் கடும்போர் புரிந்தனர். ஆயினும், வெற்றி பெறவில்லை. ஆனால், அழியாப்புகழ் எய்தினர். மன்னா உலகத்து மன்னுதல் குறித்துத் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனர்.' வீழ்ந்துவிட்ட பெல்ஜியத்திற்கு வாழ்த்துக் கூறி அமரகவி பாரதியார் அருமையாக ஒன்பது பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் வீர மறவர் மருது பாண்டியர் நடத்திய போரையும் அதன் முடிவையுமே கவனத்தில் வைத்துப் பாடியதாக அமைந்துள்ளது. 'அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் வண்மையால் வீழ்ந்துவிட்டாய் மானத்தால் வீழ்ந்து விட்டாய் வீரத்தால் வீழ்ந்துவிட்டாய் துணிவினால் வீழ்ந்துவிட்டாய், என்றெல்லாம் அவர் உள்ளம் கொதித்துக் கூறும்