பக்கம்:மானிட உடல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மானிட உடல் வதற்குத் துணைசெய்யும் பொருட்டு மலக்குடலும் அதிகமான சளியை உற்பத்தி செய்கின்றது. எரு வாயிலுள்ள சுருங்கக் கூடிய வளையம் போன்ற தசைகள் தொடர்ந்தாற்போல மலம் வெளிப்படா திருப்பதைத் தடுத்து நிறுத்தத் துணை செய் கின்றன. மலங் கழித்தல்’ என்பது நம்மால் இயக்கப்பெறும் ஒரு செயல் குழங்கைப் பருவக்கி விருந்தே அகற்கேற்ற பழக் கங்களை நாம் வளர்த்துக்கொள்ளுகின்ருேம். நம்முடைய பயிற்சிக் கேற்றவாறு மலங்கழிக்க வேண்டும் என்ற எண் ணத்தைக் தாண்டும் அளவுக்கு மலக்குடல் கிளம்பி உப்பிய தும், பெருங்குடல் மலக்குடல் சுவர்களின் சுருக்கம், நாம் விருப்பப்படி செய்யும் ஆற்றலுடன் கூடிய வயிற்றுச் சுவரின் சுருக்கம் நீண்ட மூச்சை உள்ளிழுப்பதால் உதா விதானம் கீழ்நோக்கிச் செல்லுதல் ஆகியவை ஒன்று சேர்ந்து மலத்தை வெளித் தள்ளுவதில் பங்கு கொள்ளுகின்றன. அவ் வாறு வெளித் கள்ள முனையும் அதே சமயத்தில் ஆசனத்தின் வெளிவாய் அகன்று மலங் கழித்தலே முற்றுவிக்கின்றது. உணவுப் பொருள் உணவுக் குழலினுள் சென்று மீளும் காலம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும் ; அது பல்வேறு வகை உணவுகளுக்கேற்றவாறும், அவற்றை உட்கொள்ளும் முறைக் கேற்றவாறும் மாறுபடும். உள்ளக் கிளர்ச்சி கிலேக்கேற்றவாறு குடலசைவு மிக அதிகமாக பாதிக்கப் பெறுகின்றது. சரியான உணவுப் பழக்கம் உள்ள மனிதர்களும் அவசரத்தின் காரணமாகவும், தொல்லைகள் ஏற்படும்பொழுதும் இசைப்பையிலும் குடலிலும் உணவு செரித்தலில் மாற்றத்தைக் காண்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/120&oldid=865846" இலிருந்து மீள்விக்கப்பட்டது