பக்கம்:மானிட உடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பொதுக் குறிப்புக்கள் 9 அவற்றிலிருந்தே புதியவை பிரிந்து அவற்றின் இடத்தைப் பெறுகின்றன. உயிரணுப் பிரிவு மைட்டாஸிஸ் என்ற கிரியை யால் கிறைவேற்றுவிக்கப் பெறுகின்றது. மைட்டாஸிஸ் என்ற கிரியையில் உள்ளனுவிலுள்ள குரோமேட்டின் என்ற பொருள் உயிர் அனுக்கோல்களாகப் பிரிகின்றன; இவ்வணுக் கோல்கள் உயிரணுவின் நடுவில் ஒரு வரிசையாக நிறுத்தப் பெறுகின்றன. உள்ளனுவிலுள்ள சவ்வு மறைகின்றது. ஒவ்வொரு உயிர் அனுக்கோலும் நடுவில் இரண்டாகப் பிளந்து பிரிகின்றன ; அவ்வாறு பிரிவதால் ஒவ்வொரு பாதி உயிரணுவிற்கும் சமபாதியான உள்ளனுப் பொருள் அனுப் பப் பெறுகின்றது. இவ்வாறு இரண்டு உயிர் அணுக்கோல் கள் பிரிந்து விலகி நகர்ந்ததும், ஒவ்வொன்றிலும் ஒரு சவ் வுப் படலம் உண்டாகி சைட்டோபிளாஸ்மும் இரு பாதி யாகப் பிரிந்து ஒரே மாதிரியான இரண்டு புதிய உயிரணுக்க ளாகின்றன. இவ்வாறு ஒர் உயிரணுவிலிருந்து இரண்டு உயிரணுக்கள் உண்டாகின்றன. மானிட முளைக்கருவில் பல்வேறு உயிரணுக்களின் வளர்ச்சியில் உயிரணுப் பிரிவு தம்போன்ற உயிரணுக்களை உண்டாக்குவதைத் தவிர மேலும் சில மாற்றத்தையும் உண் டாக்குகின்றது. உயிரணுப் பிரிவு அவ்வித மாற்றத்தை உண் டாக்காவிட்டால் தெளிவான பண்புகளுடன் கூடிய பல்வேறு உள்ளுறுப்புக்களே உண்டாக்க முடியாது. உயிரணுக்களின் இனப் பெருக்கம் ஒரளவு சமமற்ற பிரிவாக இருக்கக்கான் செய்கிறது ; இதில் சில சேய் உயிரணுக்கள் தம்மில் மாறு படுகின்றன ; ஆராய்ந்தால் அம்மாறுபாட்டைக் காணலாம். அவற்றை வேறுபடுத்திக் காண்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒரு வகையில் சிறந்தது எனக் காணப் பெறும் உயிரணு தோற்றத்திலும் செயலிலும் சிறப்பான பண்புகளே அடைகின்றது ; ஆல்ை, அது பல்வேறு வகை உயிரணுக்க ளாக வளர்வதில் திறனே இழந்துவிடுகின்றது. ஒரு வகையில் தாழ்ந்தது எனக் கருதப்பெறும் உயிரணு பல்வேறு வகை உயிரணுக்களாக வளர்ச்சியுறும் நிலைத்த ஆற்றலைப் பெற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/17&oldid=865950" இலிருந்து மீள்விக்கப்பட்டது