பக்கம்:மானிட உடல்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 மானிட உடல் முன்புற இதழின் பின்பகுதி தன்னிச்சையாகவுள்ள இயக்கத்துடன் தொடர்புகொண்டுள்ளது. முன்புற இதழின் அப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக் கும் நாப்பங்களில்தான் தன்னிச்சையாகவுள்ள இயக்கம் தொடங்குகின்றது. இந்த நாப்பங்களிலிருந்து இந்த நாப் பங்களைத் தாக்கும் உள்துடிப்புக்களாலும் காப்பப் புறணி யின் பிற பகுதிகளிடமிருந்தும், அடிமண்டை நரம்புக் கிாள் களிலிருந்தும், சிறுமூளையிலிருந்தும் வரும் உட்துடிப்புக்க ளாலும் இந்த காப்ப விழுதுகளின் போக்கு மாற்றப்படுகின் றது. இறங்கிவரும் காப்ப விழுதுகள் நடுகாம்புவரை வந்து அக்கண்டிலுள்ள சாம்பல் நிறப் பொருளின் உட்புறத்தி அள்ள நாப்பங்களின் நாப்பக் கிளைகளுடன் முடிவடைகின் றன. இவ்வாறு இறங்கிவரும்பொழுது இந்த விழுதுகளால் உண்டாகும் பாப்புக்கள் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக குறுக்கே கடந்து செல்கின்றன. உண்மையாகப் பார்த்தால், முன்னர் கூறப்பெற்ற புலனுணர் பாப்புக்கள் யாவும் மறு பக்கத்திற்குக் கடந்து சென்றவைகளே. எனவே, மூளையின் இடப்புற அர்த்த கோளம் உடலின் வலப்புறப் பகுதியையும், வலப்புற அர்த்த கோளம் உடலின் இடப்புறப் பகுதியையும் ஆட்சி செய்யும் காரணத்தை அறிந்துகொள்வது எளிதா கின்றது. மண்டைப் பக்க எலும்பை யொட்டிய இதழ்கள் சிறப் பற்ற பொறியுணர்ச்சியைப் பற்றியவை; இப் பொறியுணர்ச்சி பார்வைப் பொறியாலும் கேள்விப் பொறியாலும் மூளைக்கு அனுப்பப்பெறும் புலனுணர் அடிப்புக்களுக்கு எதிரானது. தாலமஸ்ஸிலிருந்து பெரும்பாப்புக்களின் கொகுதிகள் குறிப் பிட்ட மண்டைப் பக்க எலும்பையொட்டிய இதழ்களுடன் முடிவடைகின்றன ; அவை முதலில் நடுநாம்பால் அனுப்பப் பெற்ற உட்துடிப்புக்களே இந்த இதழ்களுக்குக் கொண்டு வருகின்றன. கொடுதல், நிலையுணர்வு" வலியின் சில பகுதி கள், சூட்டுநிலை உணர்வுகள் - இவை யாவும் மண்டைப் பக்க எலும்பையொட்டிய இதழ்களுக்கு அனுப்பப் பெறுகின்றன.

  • Position sense.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/256&oldid=866135" இலிருந்து மீள்விக்கப்பட்டது