பக்கம்:மானிட உடல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii தமிழ்மொழி வளம் பெற வேண்டுமானல் எல்லாத் துறைகளிலும் நல்ல தமிழ்ப் புத்தகங்கள் வெளிவருதல் வேண்டும். எந்தத் தமிழனும் தமிழிலேயே படித்து எத் தகைய உயர்ந்த அறிவையும் பெற வாய்ப்புக்கள் இருக்க வேண்டும். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் ; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் " என்ற பாரதியாரின் வாக்கை மறைமொழி போல் போற்றி அறிஞர்கள் தமிழுக்குக் கொண்டாற்ற வேண்டும். தமிழில் வரும் புத்தகங்கள் தொடக்கத்தில் மொழிபெயர்ப் பாகத்தான் இருத்தல் முடியும். மொழி மரபுகளே யெல்லாம் மேற்கொண்டு முதல்தரமான மொழிபெயர்ப்பு நூல்களே ஆக்குவ தென்பது எளிதான செயல் அன்று. ஆகற்கு மொழிபெயர்ப்பாளர் இரு மொழிப் புலமையுடன் மொழி பெயர்க்கும் துறையறிவும் நன்கு பெற்றிருக்க வேண்டும். என்ருலும், மொழிபெயர்ப்பு நூல்கள் முதல் தரமானவை யாக அமைதல் கடினம். பிற துறையறிவை நன்முறையில் பெற்று அவ்வறிவுடன் ஒன்றித் தம் சொங்க அனுபவமாய்த் தாய்மொழியிலேயே நூல்கள் வெளிவரும் பொழுதுதான் தமிழ்மொழியில் இன்னும் சிறந்த நூல்களை எதிர்பார்த்தல் (Քւջ-այւք. பிற துறைக் கலைச்சொற்களை யெல்லாம் தமிழில் அமைக் கும்பொழுது எத்தனையோ சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் ஆராய்வதற்கு இது இடம் அல்ல. எனினும், இந்நூலில் இயன்றவர்ை நல்ல கலைச் சொற்களை ஆக்கி அமைத்திருக்கிறேன். இயலாத இடங்களில் ஆங் கிலக் கலைச் சொற்களை அப்படியே மேற்கொண்டுள்ளேன். மொழிமரபு கெடாது இத் தமிழாக்கம் அமைய வேண்டு மென்பதில் மிக்க அக்கறை செலுத்தியுள்ளேன். மூல நூலி லுள்ள கருத்துக்களை மனத்தில் நன்கு ஏற்றுக்கொண்டு மொழிபெயர்த்த கால், நூல் ஒரளவு நன்முறையில் அமைக் திருக்கிறது என்றே கருதுகிறேன். எனினும், எவ்வளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை நூலேப் படிப்பவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/4&oldid=866433" இலிருந்து மீள்விக்கப்பட்டது