பக்கம்:மானிட உடல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் ፀ ፫ பான பொருள் நுரையீரலிலிருந்து வெளிப்படும் பொருளைப் பற்றிக்கொள்ளுகிறது. ஆனல், அணேச் சவ்வுகள் போன்ற அமைப்புக்கள் துப்புரவு செய்வதைவிடவும் செளகர்யத்தைக் தருவதைவிடவும் மிகவும் முக்கியமானதொரு செயலை ஆற்று கின்றன. அவை நுரையீரலுக்குள் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளே புகாமல் தடுத்து நிறுத்துகின்றன. எண்ணற்ற பாக்டீரியா என்ற இந்தக் கிருமிகள் வாயிலும் மேலுள்ள மூச்சுறுப்பு வழிகளிலும் தீங்கு பயவாவாயினும், துரையீரலினுள் அபாயகரமான தீங்கினை விளைவிக்கும் ; ஆகவே, அவை முதற் பாதுகாப்பாக மூக்கு வழிகளேயும் மூச்சுக் குழல்களேயும் கடந்து செல்லாது தடுத்து நிறுத்தப் பெறல் வேண்டும். சில சமயங்களில் நீண்ட நாட்களாக நிலைத்து கிற்கும் தொற்று நோய்களும் அடிக்கடி பற்றும் தொற்று நோய்களும் மூக்கு வழிகளிலும் மூச்சுக் குழலிலும் உள்ள அணைச் சவ்வுகளைப் பாதிப்பதால் அவற்றிலுள்ள பிசிர்கள் சிகைக்கப் பெறுகின்றன ; சளிச் சவ்வும் தோல் போல் உலர்ந்துவிடுகின்றது. அங் நிலையில் தீங்கு விளே விக்கும் பாக்டீரியாக்கள் உள்ளே புக ஏதுவாகின்றன. இருமல் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது சதா இயக் கத்திலிருந்து வரும் இருமல் மறிவினையாகும். சில சமயம் நாம் குரல்வளை அல்லது மூச்சுக் குழலிலிருந்து உணவு அல்லது குழந்தையின் சிறு விளையாட்டுக் கருவி போன்ற பொருளே அகற்றுவதற்காகக் கடுமையான இருமல் உணர்ச்சி யின் இன்றியமையாமையை உணர்கின்ருேம். இருந்தபோதி லும் வாயிலிருந்த பாக்டீரியாவைக் கொண்டுபோய் நுட்ப மான துரையீரல் இழையங்களேச் சிதைக்கக் கூடிய குறைந்த அளவு திரவத்தைச் சதா இருமி வெளியில் தள்ளும் செய லுடன் ஒப்பிடுமிடத்து இவ்வுணர்ச்சி மிகவும் அரிதான தொன்று. மருத்துவர்களும் செவிலிகளும் இதை நன்ருக உணர்வர். ஒருவர் தொண்டை உணர்ச்சி நீக்க மருந்தால் பூசப் பெற்றிருக்கும்பொழுதும் அல்லது அவர் உணர்ச்சி யற்ற நிலையிலிருக்கும்பொழுதும் திரவங்களை விழுங்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/69&oldid=866496" இலிருந்து மீள்விக்கப்பட்டது