உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

உரை : 3

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

நீர்ப்பாசனத் துறை மானியம்

நாள் : 26.03.1958

கலைஞர் மு. கருணாநிதி : சட்டப் பேரவைத் தலைவர் அவர்களே, நீர்ப்பாசன மான்யத்தின் மீது கொண்டுவரப் பட்டுள்ள வெட்டு பிரேரணைகளை - தோழர்கள் நல்லசிவம் அவர்களும், ஷண்முகம் அவர்களும் கொண்டு வந்துள்ள வெட்டுப் பிரேரணைகளை ஆதரித்து என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

தென்னகத்தில் நீர்வளம் நல்ல முறையில் பாதுகாக்கப் பட்டால்தான் நல்ல செழிப்பும், பசுமையும் இருக்க முடியும் என்கிற கருத்தினை அமைச்சர் அவர்களுக்கு நான் கூறி தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை.

பழைய காலத்திலே நம்முடைய தமிழ் மன்னர்கள் நீர் வளத்தைப் பெருக்கவேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு பெரிய பெரிய திட்டங்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும், அவைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல கரிகாலப் பெருவளத்தான் கட்டிய கல்லணை இன்றையதினம் காட்சி தருகிறதென்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வசதிகளும், வாய்ப்புகளும் குறைந்திருந்த அந்தக் காலத்தில் - விஞ்ஞானம் பெருக்கம் இல்லாத அந்தக் காலத்தில்- அத்தகைய ஒரு கல்லணையைக் கட்டி அந்தப் பகுதியை செழிப்பாகவும், சீராகவும் ஆக்கிய அந்தப் பெருமையினையும், அதைவிட அதிகமான வசதியும், வாய்ப்பும் விஞ்ஞானப்