உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

நிலையை மாற்றுவதற்கு கனம் அமைச்சர் அவர்கள் என்ன வழி செய்யப் போகிறார்கள்? கல்லூரிகளில் பிரதேச மொழியைத் தொடர்ந்து வக்கப் போகிறார்களா,

கோவையில்

செய்திருப்பதைப் போன்று சென்னை கல்லூரிகளிலும் அத்தகைய முறையைப் புகுத்துவதற்கு வேண்டிய முயற்சியில் ஈடுபடப்போகிறார்களா அல்லது 11-வது வகுப்பில் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் போதிப்பது பற்றி ஆராயப் போகிறார்களா, இப்பொழுதுள்ள நிலையில் அது இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆகவே, இது பற்றியதொரு து விளக்கத்தை கனம் அமைச்சர் அவர்கள் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக இந்த ஆண்டு இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வு (பிரைவேட் கான்டிடேட்) தனிப்பட்ட முறையில் பரீட்சை எழுதுகின்றவர்கள் தங்கள் ஊரில் அருகாமையில் இருக்கின்ற சென்டர்களைக் கேட்கின்றார்கள். நாகையில் இருக்கின்ற ஒரு மாணவன் அதன் அருகாமையில் இருக்கின்ற ஒரு சென்டரை குறிப்பிட்டுக் கேட்டிருந்தும்கூட, அந்த சென்டர் கொடுக்கப் படாமல், தொலைவிலுள்ள கடலூர் சென்டருக்கு அனுமதி கொடுக்கிறார்கள். இதனால் அந்த மாணவர்களுக்குப் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. இந்த நிலைமைகளை எல்லாம் அடுத்த ஆண்டிலாவது அகற்றுவதற்கு சர்க்கார் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக மாணவர்கள் அரசியலில் பங்கு பெறலாமா என்பதைப்பற்றி இந்த மாமன்றத்தில் பல முறைகள் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு சர்வகட்சிகள் ஒன்று சேர்ந்து இதன் மீது எடுத்த முடிவு என்னவாயிற்று? அந்த முடிவை யார் மீறினார்கள்? மாணவர்கள் மகாநாடுகளில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகச் சொற்பொழிவாளர்களோ கலந்து கொண்டு இந்த முடிவை மீறினார்களா? அல்லது காங்கிரஸ் தலைவர்களோ அல்லது காங்கிரஸ் அமைச்சர்களோ இம்மாதிரியான மகாநாடுகளில் நாம் எடுத்த முடிவை மீறி கலந்து கொண்டார்களா? என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு என் உரையை முடித்துக் கொள்கிறேன், வணக்கம்.