392
மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது
மாதம் 250 ரூபாய் உதவித்தொகை அளிக்கும் திட்டமும் இந்தக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குவே 200-க்கு மேற்பட்ட செவிலியர்
ரூ
00
vutomje
பதவிகளை
தி
உருவாக்குவதன் மூலம் வேலை வாய்ப்புக்கான வசதிகளைப் பெருக்கியிருக்கிறோம் படித்தவர்களிடையே வே வலை வாய்ப்புகளைப் பெருக்க காவல்துறையில் பள்ளி இறுதி வகுப்பில் தேறியுள்ள தகுதியுள்ள மாணவர்கள் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் திட்டத்தை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியிருக்கிறோம். இதைப்போலவே 2,000 பட்டதாரி மாணவர்களுக்கு இளைஞர் அணி மூலமாக வேலை கொடுக்க, இந்த மாமன்றத்தில், இந்தக் கூட்டத்தொடரில் அறிவித்திருக்கிறோம்.
தொழில் நுணுக்கப் படிப்பில் தேர்வு பெற்று தகுதியுள்ள 3 ஆயிரம் பேர்களுக்கு அவர்கள் சிறு தொழில் நடத்த நாம் தலைக்கு ஆயிரம் ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். LATG க்குக்
மேலும் நகர்ப்புறத்தில் ஒரு கிரௌண்டு நிலம் உள்ளவர்கள் அறுபதாயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் பயனடையத்தக்க அளவிற்கு அந்த வரியிலிருந்து விலக்கு குஅ அளித்திருக்கிறோம். சமதர்மத்தை நோக்கிச் செல்லும் பாதையில் மற்றொரு படியாக பஸ்களுக்கான உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்து இம் மாமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறோம்.
டு சென்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு காங்கிரஸ் உறுப்பினர்கள் எடுத்துக் கூறினார்கள், 'ஆளும் கட்சியில் உள்ள நாங்கள் பாஸிஸ உணர்ச்சி பெற்றவர்கள், பஸ் முதலாளிகளுக்குப் பக்கத்தில் நிற்பவர்கள்' என்றெல்லாம். 'நீங்கள் சொல்லி நாங்கள் கேட்கிறதா?' என்ற அந்த பாஸிஸ உணர்ச்சிக்கு ஆளாகாமல், நீங்கள் சொன்னதை ஏற்று அவற்றை இம் மாமன்றத்திலே நிறைவேற்றியிருக்கிறோம். வேண்டுமானால், இந்தப் பெருமை முழுவதையும் திருமதி அனந்தநாயகி அவர்களே எடுத்துக் கொள்ளட்டும். அதே நேரத்தில் பஸ் முதலாளிகளின் வசவுகளையும் அவர்களே எடுத்துக்கொள்ளட்டும்.
வ
கரும்
மேலும் 50 பஸ்களுக்கு மேற்பட்ட பயணப் பேருந்துகளை வைத்திருக்கும் நிறுவனங்களை தேசியமயமாக்கியிருக்கிறோம்.