உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


100

ஒன்றும் புதியதில்லை. இறுதித் துணை மதிப்பீடு என்று ஏன் போட்டார்கள், துணை, மானியம் என்று கூறக்கூடாதா என்று சொன்னார்கள். ஆண்டாண்டு- காலமாக ஆண்டு இறுதியில் தரப்படுவது துணை மதிப்பீடு, அது இறுதித் துணை மதிப்பீடு தது என்றுதான் பெயரிடப்படுகிறது. 1966-67ல் 62.91 கோடி ரூபாய் துணை மானியம் கோரப்பட்டது. அப்பொழுது பட்ஜெட்டினுடைய மொத்த அளவு 211 கோடி ரூபாய். அந்த நேரத்தில் 62 கோடி இறுதித் துணை மதிப்பீடு கோரப்பட்டது. இப்பொழுது பட்ஜெட்டின் மொத்த அளவு 500 கோடி என்று ருக்கும்போது 64 கோடி ரூபாய்தான் கோரப்படுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மத்திய அரசில்கூட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது, வருவாய் கணக்கிலும் மூலதனக் கணக்கிலுமாகச் சேர்த்து 6,800 கோடி ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் இப்பொழுது இறுதியில் துணை மதிப்பீடு போட்டு 1,302 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல் கோரியிருக்கிறார்கள். ஆகையினால் இது ஒன்றும் புதியதுமில்லை அசாதாரணமானதுமில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

10

70 கோடி ரூபாயைச் செலவழிக்க முடியாமல் திருப்பித் தந்து விட்டார்கள் என்று சொன்னார்கள். 57 கோடி ரூபாய் வணிகத் துறையில் நின்ற தொகையைக் குறிக்கிறது. சென்ற ஆண்டு வரையில் உணவுக் கட்டுப்பாடு இருந்து அது நீக்கப் பட்டுவிட்ட காரணத்தால் அந்தப் பணம் செலவழிக்கப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. ஆகவே அதை சரண்டர் என எடுத்துக்கொள்ளக்கூடாது. செலவழிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதுதான் காரணம். அதேபோல் ரிசர்வ் பேங்கிற்கு அதிகப் பணம் தரவேண்டுமென்ற நிலைமையில் ஒரு மதிப்பிட்டோம். அதற்குப் பிறகு 40 கோடி ரூபாய் தர வேண்டுமென்ற நிலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி 11 கோடிதான் தர வேண்டுமென்று ஏற்பட்டதன் காரணமாக அதிலே 29 கோடி ரூபாய் இருந்தது. இது சரண்டர் என்று சொல்ல முடியாது. செலவழிப்பதற்கு வாய்ப்பற்ற நிலை ஏற்பட்டது. இதை சரண்டர் என்று சொல்வதற்கில்லை. திட்ங்களுக்காக