உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

409


இது நிறைவேற்றப்பட்ட மாநிலங்களிலும் வீடுகளுக்குத் து தான் உச்ச வரம்பைக் கொண்டு வந்திருக்கிறார்களே தவிர, சினிமாத் தியேட்டர், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு உச்ச வரம்பைக் கொண்டு வர முடியாத சூழ்நிலையில், சிக்கலில் இருக்கிறார்கள். சில இடங்களில் சட்டமாக்கி விட்டார்கள். நடை முறைச் சங்கடங்களால் தாமதத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதிலே அவசரப்பட்டுச் செய்ய எதுவும் இல்லை.

ஆனால், இந்தக் கொள்கை நமக்கு உடன்பாடான கொள்கை என்பதையும், இதை மறுப்பவர்கள் நாம் அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்வேன். ஆனால், அதே நேரம் அகில இந்திய அளவிலே அடிப்படை இலக்கணம் வகுக்கப்பட வேண்டுமென்பதையும் கூறிக்கொள்கிறேன்.

வேலை வாய்ப்புகளைப் பற்றிச் சொன்னார்கள். ஆண்டு ஒன்றுக்குப் பத்து கோடி ரூபாய் அளவுக்கு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க புதிய திட்டங்களை மேற்கொண் டிருக்கிறார்கள். இதற்கு மேல் 71/2 கோடி ரூபாய் அளவுக்குப் புதிய திட்டங்களுக்காக மத்திய அரசின் அனுமதியைப் பெற்றிருக்கிறோம். அடுத்த ஆண்டு வேலை வாய்ப்புத் திட்டங்கள் எல்லாம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைகளுக்கு இந்த அரசில் எதுவுமே செய்யவில்லை, பணக்காரர்களுக்குத்தான் இந்த அரசு எல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்று இங்கே சிலபேர் எடுத்துப் பேசி னார்கள். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் ஏழைகளுக்காகச் செய்யப்படுகிறதே தவிர, பணக்காரர்களுக்கு அல்ல.

35,000 பேருக்குக் கண்ணொளி வழங்கப்பட்டிருப்பது ஏழைகளுக்காகவே தவிர, பணக்காரர்களுக்கு அல்ல.

அரசு அலுவலர்கள் ஊதிய உயர்வு இந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து தடவை அகவிலைப்படி உயர்வு மாத்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படவில்லை.