உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

417



இயலும். அந்த வகையிலே மாண்புமிகு உறுப்பினர்களுடைய பேருதவியும் தேவை என்பதை நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ல்

இந்தத் துணை மதிப்பீட்டில், தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்வதைப் பற்றி நம்முடைய நண்பர் சௌந்தர பாண்டியன் அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே.டி. கே. தங்கமணி அவர்களும் இங்கே எடுத்துச்சொன்னார்கள். அதிலும் குறிப்பாக, சக்தி பைப்ஸ்- இதற்கு அரசாங்கம் கடன் தருவதைப் பற்றி இந்த மன்றத்திலே அடிக்கடி எடுத்துச் சொல்லப்பட்டு, அதற்கான விரிவான விளக்கங்களையெல்லாம் நம்முடைய மாண்புமிகு தொழில் அமைச்சர் அவர்கள் இங்கே எடுத்துக்கூறியிருக்கிறார்கள். சக்தி பைப்ஸ்ஸுக்கு மாத்திரமல்ல, இதுவரையில் 12 பஞ்சாலைகள் பெற்றுள்ள கடன்களுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 1972 இறுதிவரை 14 பஞ்சாலைகளின் நிர்வாகங்களையும் இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. அதையும் நாம் மறந்துவிடக்கூடாது. டெக்ஸ்டூல் நிறுவனத்தின் நிர்வாகத்தை மேற்கொண்டு அந்த நிறுவனம் மூடப்பட இருந்ததைத் தவிர்க்கின்ற வகையிலே சுமார் 2,000 தொழி லாளர்கள் வேலை இழக்கக்கூடிய ஒரு பரிதாபகரமான நிலைமை உருவாக இருந்ததையும் தடுத்து, ரூ.13 இலட்சம் டிட்கோ மூலமாக, அதற்குக் கடன் வழங்கப்பட்டு, இப்பொழுது அந்த நிறுவனம் லாபத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. என் கின்ற மகிழ்ச்சியான தகவலும் நமக்கு வந்து கொண்டிருக்கிறது.

ன்

அதைப்போல், சக்தி பைப்ஸ் நிறுவனமும், மூடவிருந்த நேரத்திலேதான்- அது மூடவிருந்தது, அந்தத் தொழில் பறிபோக வேண்டிய நிலைமையில் இருந்தது, அப்பொழுது போய் காப்பாற்ற வேண்டுமா என்கின்ற கேள்வியை நண்பர் சௌந்தர பாண்டியன் இங்கே எழுப்பினார்-சாகிற நேரத்திலேதான் இன்னும் அதிகமாக நாம் காப்பாற்ற வேண்டுமென்பதை மறந்து விடக் கூடாது. வாழ்கிற நேரத்திலும் காப்பாற்றுகிற முயற்சிகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மறந்துவிடக் கூடாது. சாகப்போகிற நேரத்தில் இன்னும் அதிகமாக முயற்சி எடுத்துக்

ம்