உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

425


உரை : 32

நிதி ஒதுக்கீடு மசோதா

நாள்: 28.11.1973

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: மு.கருணாநிதி: தலைவர் அவர்களே, இந்த நிதி ஒதுக்கீட்டு மசோதாவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர்களும், மாண்புமிகு உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள் நேற்றையதினம், துணை மதிப்பீடு மானியக் கோரிக்கையிலே தெரிவித்த கருத்துக்கள் பலவும் இன்றைய தினமும் திரும்பச் சொல்லப் பட்டிருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன்.

அது மாத்திரமல்ல, இந்த அவையிலே தொடர்ந்து விவாதித்துக் கொண்டு வரப்படுகின்ற பல்வேறு விஷயங்கள், எழுதப்பட்ட வினாக்கள், அவைகளுக்குக் கிடைத்த விடைகள், இந்த அடிப்படையிலும் பல பிரச்சினைகள் இங்கே எடுத்துப் பேசப்பட்டிருக்கின்றன. அவையினுடைய நேரம் கருதி நான் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பதில் சொல்கின்ற நிலையை வைத்துக் கொள்ளாமல், விரைவிலே என்னுடைய பதில் உரையை அளித்து, அடுத்த நிகழ்ச்சிகளுக்கு வழிவிடுவது பொருத்தமுடையது என்று நான் கருதுகின்றேன்.

ம்

திரும்பத் திரும்ப நீதி விசாரணைபற்றி இந்த மன்றத்திலே பேசப்பட்டிருக்கிறது. நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் சுவாமிதாஸ் அவர்கள் பேசுகிற நேரத்தில் தவறான காரியங்களிலே சில அதிகாரிகள் ஈடுபட்டு விடுகிறார்கள்; அதற்கும் அமைச்சர்களுக்கும் நேரடியான தொடர்புகள் இல்லாவிட்டாலும் அவர்கள் செய்கின்ற காரியங்களுக்குப் பொறுப்பேற்று நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அந்தக் கடமை அமைச்சர்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்திக் கூறினார்கள். அந்தக் கடமையை உணர்ந்த காரணத்தினாலே தான் இங்கே நம்முடைய முஸ்லிம்லீக் கட்சியின் சார்பில் பேசிய ஜப்பார் அவர்கள், மற்றும் சில உறுப்பினர்கள்