உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

விற்கிறார்கள். அங்கு அந்தத் தேரிலுள்ள கலைப் பொருட்களை எல்லாம் தனியாக எடுத்து, பழைய காலத்தில் மரங்களினால் செய்யப்பட்ட அந்தச் சிற்பங்கள் வெளிநாடுகளில் 50 ஆயிரம் ரூபாய், 60 ஆயிரம் ரூபாய் என்று விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை நான் எடுத்துச் சொல்கின்ற காரணத்தால், அமைச்சர் அவர்கள் திடீரென்று திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள வர்களுக்கு கடவுள் மீது-கோவிலின் மீது-தேரின் மீது-நம்பிக்கை வந்து விட்டது என்று முடிவுரையில் கூறக் கூடும். கிரேக்க ரோமானிய நாட்டில் எல்லாம், கலைகளிலுள்ள சிறப்பைக் காட்டுவதற்காக, அங்கிருந்த கடவுள்களின் உருவங்களை எல்லாம்-மாஜி கடவுள்களை எல்லாம் கலைச் செல்வங்களாக்கி கலைக்காட்சியாக வைத்திருக்கிறார்கள். அந்த அளவில் இவைகளையும் நாம் காட்சிப் பொருட்களாக வைத்துக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு, அறநிலையங்களை நடத்துபவர்கள் அக்கறை காட்டவேண்டும் என்பதற்காகத்தான் இதை கனம் அமைச்சர் அவர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

6

அடுத்து, மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்வதைப்பற்றி எதிர் கட்சியிலுள்ள பல அங்கத்தினர்கள் இங்கே பல கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். ச ஆளும் கட்சியிலிருந்து சில அங்கத்தினர்கள் இதைப்பற்றி சுட்டிக்காட்டினார்கள். 1960-61ல் மந்திரிகளின் சுற்றுப்பயணத்திற்காக 97,903 ரூபாயும் 1961-62ல் ஒரு லட்சம் ரூபாயும் செலவழித்து, 1962-63ல் 1,12,500 ரூபாய் செலவு என்று திட்டம் போடப் பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்யவேண்டியதுதான். இந்த மன்றத்திற்கு முதல் முதலாக நான் வந்த காலத்தில் மந்திரிகள் அவசியம் இருந்தால் மாறுவேடத்தில்கூட போய் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். சிலருக்கு மாறுவேடம் கூடத் தேவையில்லை, இவ்விதம் மாறுவேடத்தில் போனால் பல விஷயங்களை, மக்களுடைய குறைகளை அறிந்து கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால் சுற்றுப்பயணத்திற்கும் ஓர் அளவு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை மட்டம் தட்டுவதற்கென்றே, எதிர்க்கட்சிகளை அழைப்பதற்கென்றே. எதிர்க்கட்சிகளை தாக்குவதற்கென்றே இந்த சுற்றுப்பயணத்தைப் பயன்படுத்திக்