உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


ன்


சம்பளத்தின் அடிப்படையில் இதுவரை கணக்கிடப்பட்டு வந்தது. இப்பொழுது 10 திங்களில் வாங்கிய சராசரி சம்பளத்தின் அடிப்படையில் அந்த ஓய்வூதியம் கணக்கிடப்படுவதால் ஓரளவு ஓய்வூதியம் கூடுகிறது என்பது மட்டுமல்ல, கணக்கிட்டு வரும் முறைகளும் எளிதாக்கப்பட்டிருக்கின்றன.

பணி இடையீடுகள் (பிரேக் இன் சர்வீஸ்) கண்டோன் செய்யப்படுகிறது. இதனால் இடையீட்டுக்கு முந்திய பணியும் மு ஓய்வூதியத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும் முறையில் சலுகை அளித்திருக்கிறது. அரசு ஊழியர் ஒருவர் வயதுப்படி ஒரு திங்களில் எந்த நாளில் ஓய்வு பெற்றாலும் அவர் அத்திங்களில் கடைசி நாளில் ஓய்வு பெற்றதாகவே கருதப்படுவர் என்ற புதிய ஏற்பாடு 1-4-1974 முதல் வந்திருக்கிறது. ஒருவர் ஜனவரி 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார் என்றால் அவர் ஓய்வு பெற்றவராக அறிவித்து விடாமல் ஜனவரி திங்கள் முழுமையும் பணியாற்றச் சொல்லி ஜனவரி திங்களில் இரண்டு நாளைக்குரிய சம்பளத்தைத் தருவதற்குப் பதிலாக அத்திங்களுக்குரிய சம்பளம் முழுவதும் தருகிற அந்தச் சலுகையையும் இந்த அரசு அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதனால் அவருடைய சராசரிச் சம்பளம், தகுதிப் பணிக்காலம் ஆகியவற்றைக் கணக்கிடுவது எளிதாகிறது.

நிலையான பதவி வகிக்காதவரும் (நான்-பெர்மனென்ட் கவர்ன்மென்ட் செர்வன்ட்ஸ்) 1-10-1969 முதல் ஓய்வூதியம் பெற உரிமை உள்ளவர்கள் ஆவார்கள் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

ஓய்வூதியம் 1-3-1970-ல் குறைந்தபட்சம் ஊதியம்30 ரூபாயாக இருந்ததை 1-4-1972-ல் 40 ரூபாயாக உயர்த்தி, 1-4-1973-ல் 30 ரூபாயாக உயர்த்தப்படும், 1-10-1973-ல் அகவிலைப்படி உள்ளிட்டு 35 ரூபாயாக உயர்த்தினோம். 1-4-1972-ல் அகவிலைப்படி 5 ரூபாயாக இருந்தது; 1-4-1973-ல் 10 ரூபாயாகவும், 1-10-1973-ல் 15 ரூபாயாகவும், 1-4-1974-ல் 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருப்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன். இந்த ஓய்வூதியத் தொகையை அவர்களுக்கு மணியார்டர் மூலம் பண அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முதலில் சென்னை மாநகரத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் அமுலாக்கப்பட்டு வந்த இந்தத் திட்டம்