உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


அவர்கள் கேட்டார்கள். திட்டக்குழு உறுப்பினர்கள் தாங்கள் செய்யவேண்டிய வேலையை முடித்து 30-3-74 அன்று திரு. ராஜாராம் அவர்களின் தலைமையில் என்னைச் சந்தித்து து திட்டக் குழுவின் அறிக்கையை முழுமையான அறிக்கையை என்னிடம் தந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதுபற்றி அரசு பரிசீலித்து, அதற்குப் பிறகு மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எல்லாம், அவர்களது கவனத்திற்கெல்லாம் அந்த அறிக்கை பற்றிய சாராம்சம் கொண்டுவரப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்வேன்.

நண்பர் ஹாண்டே அவர்கள் இரண்டு மூன்று குற்றச் சாட்டுகளைச் சொன்னார்கள். கவர்ன்மென்ட் பிளீடர் ஏதோ ஒரு வழக்கில் அரசாங்கத்திற்கு விரோதமாக வாதாடி இருக்கிறார். ஆஜராகியிருக்கிறார் என்பதை எடுத்துச்சொன்னார்கள். அது ஒன்றும் இந்த அரசு போட்டிருக்கும் சட்டம் அல்ல; வகுத்து இருக்கும் விதி அல்ல. 1889-ம் ஆண்டிலேயே அது வகுக்கப் பட்டிருக்கிறது.

அரசு வக்கீல் குற்றவியல் வழக்குகளில் (கிரிமினல் கேஸ்களில்) அரசுக்கு எதிராக தனி நபர்களுக்கு வழக்காட மறுப்பு இல்லை. அதைப் பயன்படுத்திக்கொண்டுதான் இப்போது நம்முடைய கவர்ன்மென்ட் பிளீடர் ஒரு சில வழக்குகளில் அரசுக்கு எதிராக தனி நபருக்கு வாதாடி இருக்கிறார். இது 1889, 1900-லே போடப்பட்டிருக்கிறது. ஆகவே வாதாடலாம் என்று நான் வாதாடுவதாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ம்

என்னைப் பொறுத்தவரையில், இந்த அரசைப் பொறுத்த த வரையில் நானே நம்முடைய அமைச்சர், சட்ட அமைச்சர் அவர்களைக் கலந்துகொண்டு ஆலோசித்த நேரத்தில், சட்டம் இடம் தந்தாலும் மரபு இடம் தருவதாக எங்களுடைய மனம் ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே, இது 1889-ல் போடப்பட்ட சட்டமாக இருந்தாலும், பிறகு 1949-லே அதை மாற்றவேண்டுமென்று முயற்சி எடுக்கப்பட்டு, அந்த முயற்சி தொடக்கத்திலேயே கருகி விட்டது என்றாலும்கூட அதை எப்படியும் மாற்றி, அது போன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு நிச்சயமாக இந்த விதிமுறைகள் திருத்தப்