உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக்கழகமாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியிலுள்ளவர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் மட்டும் சுருக்கெழுத்தாளர்கள் மூலமாக குறிப்பு எடுக்கப்படுகிறது.

அவ்விதம் குறிப்பு எடுக்கப்பட்டு அதன் மூலம்

து

எதிர்க்கட்சியினரின் மீது ஏதாவது வழக்கு போடலாமா என்று சர்க்கார் திட்டமிடுவதற்கு சாதகமாக இருக்கிறது. எதிர்க்கட்சியினரின் பேச்சுக்களை குறிப்பு எடுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அதைப் போலவே ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும், அமைச்சர்கள் பேசுகின்ற பேச்சுக்களையும் குறிப்பெடுக்க வேண்டாமா என்பதை - கனம் அமைச்சர் அவர்கள் யோசித்து பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு கனம் அம்மையார் அவர்கள் ஓரிடத்தில் பேசும்போது “என்னுடைய கையில் இப்போது துப்பாக்கியிருந்தால் அண்ணாத்துரையை சுட்டிருப்பேன்” என்று று பேசினதை நானே என் காதால் கேட்டேன். அதற்குப் பின்னால் அவர்கள் கூறினதற்கு பதில் கூறுகிற முறையில், அடுத்த பக்கத்தில் நடந்தக் கூட்டத்தில் கூறினேன், “கனம் அம்மையார் அவர்களுக்கு இட்டிலி, தோசை சுட்டு பழக்கமில்லை போலிருக்கிறது, அதனால்தான் ஆளையாவது சுடலாம் என்று புறப்பட்டிருக்கிறார்கள்” என்று பதிலும் கூறினேன். இவ்விதம் ஆளும் கட்சியிலுள்ள உறுப்பினர் மட்டும் கூறவில்லை, ன்னும் சில மந்திரிகள் பேசுகின்ற பேச்சைக் கேட்டால் - இந்த சபையிலுள்ள தாய்மார்கள் யாரும் கோபித்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்... பேசின் பிரிட்ஜ் அருகில் நடந்த ஜ் கூட்டத்தில் ஒரு அமைச்சர் பேசும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தை விபசார முன்னேற்றக் கழகமாக மாற்றிவிடலாம் என்ற அரிய கருத்தை தனக்கிருக்கின்ற இயல்புக்கு ஏற்ற வகையில் எடுத்துப் பேசினார்கள், இவற்றையெல்லாம் குறிப்பெடுக்க வேண்டாமா? இப்படிப்பட்ட பேச்சுக்களை எல்லாம் சுருக்கெழுத்தாளர்கள் மூலமாக குறிப்பெடுத்து அதை அமைச்சர்களின் பார்வைக்கு கொண்டு வந்து அதன் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டாமா என்று கேட்கிறேன். எதிர்க்கட்சியினர் இம்மாதிரி பேசவில்லை என்றோ, பேசியே இருக்கமாட்டார்கள் என்றோ

6

பெயர்

நான்