உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

457


ஆர்டர்

உத்தரவு


போட்டவர்கள் அதை மாற்றி,

பின்தங்கியவர்களுக்கும் ரூ. 2,000 என்று போட்டு விட்டார்கள் என்றும் சொன்னார்கள். எப்படித்தான் மனம் துணிந்து தவறு என்று சொல்கிறார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை. எப்படி அரிசனங்கள் இந்தச் சமுதாயத்திலே பின்னடைந்திருக் கிறார்களோ, அதற்கு நேரிடையாகவே - சமமாகவே பின்தங்கிய மக்களும் இந்தச் சமுதாயத்திலே பின்தங்கியிருக்கிறார்கள்.

1967-ஆம் ஆண்டு ஜூலை 31-இல் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அரிசன மாணவர்களுக்கும், பாக்வார்ட் கிளாஸ் மாணவர்களுக்கும், இருவருக்குமே வருமான வரம்பு ரூ. 1,500 என்று இருந்ததை ரூ. 2,000 ஆக மாற்றி, அரசு ஆணை 1967-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி போடப்பட்டது.

அதற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அரிசன மக்களுக்கும் ரூ. 2,000 என்று இருந்ததை 1970-71-இல் மாற்றி அரிசன மக்களுக்கு மட்டும் ரூ. 2,500 என்று உயர்த்தினோம். பின்தங்கிய மக்களுக்கு இருந்த ரூ. 2,000 அப்படியே இருந்தது. இப்போது அரிசனங்களுக்கு ரூ. 2,500 என்பதை உயர்த்தி ரூ.3,000 என்றும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ரூ. 2,000 என்று இருந்ததை ரூ. 2,500 என்றும் ஆக்கியிருக்கிறோம். ஆகவே, பின்தங்கிய மக்கள் என்றால் சிலருக்கு ஒரு அலர்ஜி.

திருமதி சத்தியவாணிமுத்து : நான் கூறியது. அமைச்சரவையில் எடுத்த முடிவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாத்திரம்தான்; ஆனால் ஜி. ஓ. போடும்போது இரண்டு பேருக்கும் சேர்த்துப் போட்டார்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : 1967-இல் அம்மையார் அவர்கள்தான் அரிசன நல அமைச்சராக இருந்தார்கள், அண்ணா முதலமைச்சராக இருந்தார். 1967-லிருந்து 7 ஆண்டுக் காலம் கேட்காமல் இருந்துவிட்டு இப்போது யார் ஆ அந்த ஆர்டரைப் போட்டார்கள் என்று கேட்பது, இவர்கள் அரிசன நல அமைச்சராக எப்படி இருந்தார்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை. இவர்கள் அப்போதல்லவா கேட்டிருக்க வேண்டும். ரூ. 1,500 என்பது அப்பொழுதே பின்தங்கியவர்களுக் கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இருந்த தொகைதான். அது

6