உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


உரை : 35

இறுதித் துணை மதிப்பீடு

நாள்: 22.03.1975

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 1974-75ஆம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகளை இம்மன்றத்தின் முன் வைக்கிறேன். மானியக் கோரிக்கைகளை விளக்கும் விரிவான அறிக்கை இம்மன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கைகளின் மொத்த தொகை 108.28 கோடி ரூபாயாகும். இதில் 55.87 கோடி ரூபாய் வருவாய்க் கணக்கிலும், எஞ்சிய தொகைகடன்- மூலதனக் கணக்குகளின் கீழும் அடங்கும். மொத்த மானியக் கோரிக்கைகளில் 107.36 கோடி ரூபாய் அனுமதித்த இனங்களின் கீழும் 92 இலட்சம் ரூபாய் சாட்டிய இனங்களின் கீழும் அமையும். இந்த மானியக் கோரிக்கைகளில் அடங்கியுள்ள முக்கியச் செலவினங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

ம்

வறட்சித் துயர் தணிப்புக்கு நாம் மேற்கொண்டுள்ள பணிகளுக்காக இந்தத் துணை மதிப்பீடுகளில் மொத்தம் 21.29 கோடி ரூபாய்ச் செலவுக்கு 40ஆம் மானியத்தில் வகை செய்யப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்பார்வையின் கீழ் 8.56 கோடி ரூபாய் செலவுக்கும் குடிநீர் வடிகால் நிறுவனத்தின் மூலம் 2 கோடி ரூபாய்ச் செலவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கங்களை, இயன்ற அளவுக்கு வறட்சிப் பகுதிகளில் துயர் தணிப்புப் பணிகளுக்காகச் செலவிட நாம் முடிவு செய்துள்ளதை மன்ற உறுப்பினர்கள் அறிவார்கள். இவ்வாறு செலவிடும்போது, வறட்சித் துயர் தணிப்புத் தலைப்பின்கீழ் அந்த நிதி ஒதுக்கங்கள் செலவாகக் காட்டப்படும். இதற்காகக் கணக்கு முறையில் அவையின் ஒப்புதலைப்

று