உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

55

கிடைக்குமா என்று சந்தேகப்பட்ட இடத்திலிருந்து கிடைக்கிறது என்பதற்காக நாங்கள் மிக மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த மாமன்றத்தில் நம் சட்டமன்ற மானியத்தைப் பற்றி இங்கு பேசுகிற நேரத்தில் குறிப்பிட வேண்டியது மிக மிக முக்கியமாக ஒன்று உண்டு. இந்தச் சட்ட மன்றத்தில் சில நேரங்களில் சூடு அதிகமாகி விவாதங்கள் நடைபெற்றன என்று நான் குறிப்பிட்டேன். அவைகளில் முக்கியமாக, இந்த மன்றத்திற்குச் சம்பந்தப்படாதவர்கள் வெளியிலே இருப்பவர் களுடைய பெயர்கள் அடிக்கடி இங்கு இழுக்கப்பட்டன. அந்தப் பெயர்கள் சொல்லப்படாவிட்டாலும், இவரைத்தான் குறிப்பிட்டு இருப்பார்கள்' என்று வெளியே இருப்பவர்கள் பத்திரிகை நிருபர்கள், தாங்களாகவே கற்பனை செய்து, பெயரைக்கூடப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள். நேற்றையதினம் நிதி அமைச்சர் அவர்கள், 'வெளியிலே இருக்கிற ஒரு பெரியவர்' என்று குறிப்பிட்டார்கள். ஆனால், பத்திரிகையில் ‘எந்த பெரியவரை இவர் குறிப்பிட்டார்' என்று பெயர் பொறித்து, தலைப்புச் செய்திகள் வந்திருக்கின்றன.

ம்

ஆகவே இந்த மன்றத்தில் பேசுகிற நேரத்தில் மன்றத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிற நேரத்தில் மிகவும் அமைதியுடனும், எச்சரிக்கையுடனும் குறிப்பிட வேண்டுமென்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பெரியவருக்காக நாங்கள் வக்காலத்து வாங்குகிறோம் என்றோ, அவர்களின் கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒன்றாகக் கலந்துவிட்டது என்றோ யாரும் தயவு செய்து கற்பனை செய்துக் கொள்ளக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மாமன்றத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் படம் அழகாக வைக்கப்பட்டிருக்கிறது. அந்த படத்தின் கீழே தன் இருதயத்திலும், அறிவிலும் மகத்தானவர் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பெரியவரைச் சிறைச்சாலையில் தள்ள வேண்டுமென்று சொல்லுகிற அளவு இந்த மன்றத்தில் பேசப்படுவது மிகவும் வருந்தத்தக்கதாகும். இத்தகைய நிலை விவாதத்தில் நீடிக்குமானால் இந்த மன்றம் தன்னுடைய பழம் பெருமையையெல்லாம் இழந்துவிடக் கூடுமோ என்ற அச்சத்தினால் நான் இதைத் தங்கள்