உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

59

ஊர்காவல் படை என்று அமைத்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே சீரிய எண்ணத்தில் ஒன்றுபட்டிருக்கும் முயற்சியே ஊர்க்காவல் படை. இன்றையதினம் கட்சிப் பாகுபாடின்றி எல்லோரும் நமக்கெல்லாம் பொது எதிரியான சீனரை விரட்டியடிக்கவேண்டும் என்றே கங்கணம்

சி

கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் இடைத்தேர்தலைக் கொண்டுவந்து நிறுத்தினால் ஊர்க்காவல் படையினரும் அந்தக் கட்சி இந்தக் கட்சி என்று தேர்தலில் கலந்து கொள்ள இரண்டுபட வேண்டுமா? இதைப்பற்றியெல்லாம் கனம் அமைச்சர் அவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அடுத்தபடியாக தமிழக மாநிலத்தைப் பொறுத்த வரையில் தேர்தல் தலைப்பில் கூறவேண்டுமென்றால் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செல்லும் நிலைமை இருந்தது. இனி மக்கள்தொகை கணக்குப்படி 41-இல் இருந்து அது 38 ஆகக் குறைகிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமை மக்கள் தொகை கணக்கை வைத்து ஏற்படுகிறது மக்கள் தொகை 51-ல் இருந்து 61-ஆம் ஆண்டு முடிய பார்க்கிற போது நம் ராஜ்யத்தில் மக்கள் தொகையின் பெருக்கம் மிகமிகக் குறைவாக இருக்கிறது. அஸ்ஸாம் மாகாணத்தில் 34.3 சதம் ஏற்றமும், பீகாரில் 19.75 சதம் ஏற்றமும், மத்தியப்பிரதேசத்தில் 24.25 சதம் ஏற்றமும், கேரளத்தில் 24.55 சதம் ஏற்றமும், மேற்கு வங்கத்தில் 32.94 சதம் ஏற்றமும் ஏற்பட்டிருக்கிறபோது தமிழகத்தில் மட்டும் 11.73 சதம் ஏற்றம்தான் இருக்கிறது என்று கணக்கு காட்டுகிறது. மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமிலும் மக்கள் தொகை அதிகமாகப் பெருகியிருக்கிறது என்பதை வெளியிடுகிற நேரத்தில் அங்கு சுரங்கத் தொழிலும், வேறு பல ஆலைத் தொழில்களும், எண்ணெய் சுரங்கங்களும் பெருகியிருக்கிற காரணத்தினால் மக்கள்தொகை பெருகியிருக்கிறது என்று காரணம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மக்கள்தொகை குறைந்திருப்பதற்குக் காரணம் புரியவில்லை, புதிராக இருக்கிறது என்று காரணம் கூறாமல் விடப்பட்டிருக்கிறது.