உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

பெறவேண்டுமென்ற சூழ்நிலை இருக்கிறது. மணியக் காரர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும் ஏதாவது சொந்தத் தகராறு இருக்குமானால், உள்ளபடியே இந்தக் கடனைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்கூட பெறக்கூடிய நிலைமை இல்லாமல் அற்றுப் போய்விடுகிறது. அவர்களுடைய குத்தகைச் சீட்டு, கிஸ்தி கட்டியதற்கான ரசீது இவைகளை வைத்து கடன் தொகை அளிப்பதற்கான நிலைமைகளை ஆராய்ந்து, கடன் தொகை அளிக்கவேண்டுமென்று நான் அரசினரை மிக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ல்

3 கோடி 90 லட்ச ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்று சொல்லப்படும் பொழுது, பார்ப்பதற்கும், கேட்பதற்கும் பளபளப்பான திட்டங்களாக அவைகள் இருக்கின்றனவே தவிர, அவைகள் போய்ச் சேரவேண்டிய இடத்தில் போய்ச் சேரவில்லை என்பதை அரசினர் மிக மிக கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். முன்பு இந்த மன்றத்தில் வீற்றிருந்த எங்கள் கட்சித் தலைவர் அண்ணா அவர்கள் இந்த மன்றத்தில் ஹரிஜன மான்ய விவாதத்தின்போது பேசுகையில், உதாரணமாகக்கூட ஒன்று குறிப்பிட்டார்கள் இவ்வளவு பணம் செலவழிக்கின்றீர்களே, அது எங்கே போய்ச் சேருகிறது என்று நாங்கள் கேட்கிற நேரத்தில், எங்கே போய்ச் சேருகிறது என்ற ஆச்சரியம் உங்களுக்கே ஏற்படுகிறது. இது எப்படியிருக்கிறது என்றால், ஒரு அரசன் “நான் செலவழிக்கிற பணம் என்ன மக்களிடத்தில் போய்ச் சேருகிறதா?" என்று கேட்க, அமைச்சர் அந்த அரசரைப் பார்த்து, அவருடைய கையிலே பனிக்கட்டியைக் கொடுத்து, "இதை 10 பேர் கையிலே கொடுங்கள்” என்று குறிப்பிடுகிறார். அரசர் 10 பேர் கையில் கொடுத்துவிட்டு, கடைசியில் அது அரசர் கைக்கு வருகிற நேரத்தில் ஒரு துளி நீர்தான் மிச்சம் இருந்தது. இப்படி 10 பேர் கையிலே கொடுத்த பனிக்கட்டிபோல் இன்றைய தினம் அரசினர் ஹரிஜனங்களுக்காக செலவழிக்கப்படுகிற பணம் போய்ச் சேருகிறது என்று கருதுகிறேன் என்று சொன்னார். பெரிய தொகை ஹரிஜனங்கள் கைக்கு போய்ச் சேருவதில்லை. தொகை பெரும் தொகை என்று அரசினர் குறிப்பிடலாம். இது போதாத தொகை என்று ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே குறிப்பிட்டார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.