உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

77

இருக்கிற ஹரிஜனங்கள் சென்று வழிபடுவதற்கு சட்டம் துணை வ புரிகிறதே தவிர, வழிபடுவதற்கு இன்றைய தினம் நடவடிக்கை இருக்கிறதா, நடைமுறையில் அது நடக்கிறதா, இல்லை, அது மாத்திரமல்ல. ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைத் தொழலாம் என்று ஹரிஜன மக்களுக்கு உரிமை அளிக்கப் பட்டிருக்கிறதே தவிர, ஆண்டவனுக்கு அருகாமையில் இருந்து, ஆண்டவனுக்குப் பூஜை செய்வதற்கும், ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்வதற்கும்.

Srimathi T.N. ANANDANAYAKI : Sir, on a point of order, the hon. Member, Sri M. Karunanithi never goes to the temple. How can be know about the worship and other things?

Mr. SPEAKER : It is not a point of order. The hon. Lady Member, Srimathi T.N. Anandanayaki, I think is a lawyer and she must know what is a point of order. It is not at all a point of order. Let the hon. Lady Member resume her seat.

3

கலைஞர் மு. கருணாநிதி : கனம் தலைவர் அவர்களே, கொலை செய்தவர்கள்தான் கோர்ட்டுக்குப் போகவேண்டும் என்பதல்ல. கொலைக் குற்றங்களில் வாதாடுவதற்கும் கோர்ட்டுக்குப் போகலாம் என்பது அங்கத்தினருக்குத் தெரியும். ஆண்டவன் ஆலயத்திற்கு நேரடியாகச் சென்று ஹரிஜன மக்கள் வ வழிபடலாம் என்ற உரிமை இருக்கிறதே தவிர, ஆலயத்தில் இருக்கும் ஆண்டவனுக்கு பூஜை செய்வதற்கோ, அபிஷேகம் செய்வதற்கோ உரிமை அளிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட உரிமை அளிக்கப்படாததற்கு என்ன காரணம்? தீண்டாமையை ஒழிப்பதற்குத் தீவிரமாகப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அதற்காக ஹரிஜன வாரம் கொண்டாடப் வ படுகிறது என்றும், ஹரிஜன தினம் கொண்டாடப்படுகிறது என்றும், மாவட்ட வாரியாக ரூ ரூ. 1,000 செலவழிக்க வேண்டுமென்றும் சொல்லப்படுகிறது. தீண்டாமை ஒழிப்புப் பிரசாரத்திற்காக இவ்வளவு பணம் செலவழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பிரசாரம் ஒழுங்காக நடைபெறுகிறதா? திரு. ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கையிலே கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது :

வி