உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

ஜவுளித் தொழில் ஊதிய போர்டு சிபாரிசுக்கு ஏற்பவோ, சிக்கனச் சீரமைப்புபற்றி தேசீய உடன்பாட்டுக்கு ஏற்பவோ, சிக்கனச் சீரமைப்பு இல்லை என்று பி. அண்ட் ஸி. மில் நிர்வாகம் இந்தச் சீரமைப்பின் பேரால் பல தொழிலாளர்களை இன்றைய தினம் வேலையை விட்டு நீக்கியிருப்பதைக் கண்டிக்கிற வகையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தொழிலாளர் வாழ்வு பாதிக்கப்பட்டால், தொழிலாளர்களுடைய

உள்ளம்

வாடுவதற்கான நிலைமைகள் தோன்றுமேயானால், நாம் எதிர்பார்க்கிற உற்பத்தி அதுவும் இந்த நெருக்கடியான நிலையில் நாம் எய்த முடியுமா, நாம் அடைய முடியுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனக்கு முன் பேசிய கனம் மதியழகன் அவர்கள் தொழில் துறை பெரும்பாலும் தனியார்துறை வசமே ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். இந்த மாமன்றத்தில் 1957-ம் ஆண்டிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் இடம் பெற்ற நேரத்திலிருந்து, பொதுத் துறையை வளர்க்க வேண்டுமென்றும், தனியார் துறைக்கு ஆக்கம் அளிக்கிற போக்கினை அரசினர் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்திக் கொண்டு வந்திருக்கிறோம். எந்த தனிப்பட்ட முதலாளியும் நாட்டில் இருக்கிற ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தொழிலை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்கத்தோடு ஆரம்பிப்பதில்லை. லாப நோக்கத்தோடு, தனக்கு எவ்வளவு லாபம் கிட்டும் என்று லாபக் கணக்கைப் பார்த்துக் கொண்டுதான் முதலாளி வர்க்கத்தினர், தனியார் துறையில் தொழிலில் ஈடுபடுகிறார்கள். தனியார் தொழில்களுக்கு அரசாங்கம் எல்லாச் சலுகைகளையும் தந்து, தனியார் துறையை மேலும் மேலும் ஊக்கப்படுத்திக் கொண்டு போவதும், கேட்டால், இதற்குப் பெயர்தான் ஆவடி சோஷலிஸம் என்று கூறுவதும், இந்த கலப்பட பொருளாதாரம்தான் காங்கிரஸ் கட்சியின் தத்துவம் என்று கூறுவதும், உள்ளபடியே முற்போக்கு சக்திகளால் ஒத்துக்கொள்ளக்கூடிய நிலை அல்ல என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தனியார் துறைக்கு அரசினர்மூலம் தரப்படுகிற கடன் அல்லது நிதிக் கார்ப்பொரேஷன்மூலம் தரப்படுகின்ற உதவிகள் எப்படி