உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

உரை : 10

கூட்டுறவுத் துறை மானியம்

நாள் : 23.03.1963

கலைஞர் மு. கருணாநிதி : சட்ட மன்றத் தலைவர் அவர்களே, இன்று கூட்டுறவு மான்யத்தின்மீது எங்கள் கட்சியின் சார்பிலே எனது நண்பர் வடிவேலு அவர்கள் தந்துள்ள வெட்டுப் பிரேரணையை ஆதரித்து என்னுடைய கருத்துக்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

கூட்டுறவு துறையில் நீண்ட நெடுங்காலமாக நல்ல அனுபவம் பெற்றவர்கள் அந்த கூட்டுறவுத் துறையிலே மேலும் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்கிற நோக்கத்தோடோ என்னவோ, அண்மையிலே ஆளும் கட்சியோடு கூட்டுறவு கொண்டு, இன்றைய தினம் அமைச்சராகப் பணி புரிந்து இந்தத் துறையை மேலும் மேலும் வளர்ப்பதற்காக நல்ல முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக இந்த நேரத்திலே அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்வதற்குக் கடமைப் பட்டிருக்கிறேன்.

6

று

நம்முடைய மாநிலம் கூட்டுறவுத் துறையில் வேறு மாநிலங்களை விட உயர்ந்து விளங்குகிறது என்றும், மேம்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய ஒப்பிட்டுப் பார்க்கிற தன்மை, உயர்ந்து விளங்குகிறது என்று குறிப்பிடுகிற விமர்சனம், கூட்டுறவுத் துறையினுடைய திறமையைப் பொறுத்ததாக இருக்கிறது என்று என்னால் கூற முடியுமே தவிர, அதே நேரத்தில் திறமைக்கும் நேர்மைக்கும் இடையிலே இருக்கிற வேறுபாட்டையும் நான் இங்கே உணர்த்தாமல் இருக்க முடியாது. இங்கு பேசிய பல உறுப்பினர்கள் நல்ல நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள