உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

அவர்களுக்கு சிபாரிசு செய்து ஒரு பத்துப் பெயர்களைத் தந்தார்கள். அதை ரெஜிஸ்ட்ரார் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு பெயரை அடித்து விட்டு அவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணமோ என்னவோ எனக்குத் தெரியவில்லை, அந்தக் குறிப்பிட்ட பெயரை அடித்துவிட்டு அந்தத் தொகுதி எம்.எல்.ஏ பெயரை இணைத்துவிட்டார். ஆன்ால் அந்த தொகுதி எம்.எல்.ஏ "நான் டைரக்டராக இருக்கமுடியாது" என்று மறுத்துவிட்ட பிறகுகூட முதலில் அடிக்கப்பட்ட பெயர் சேர்க்கப்பட்டதா என்று பார்த்தால், சேர்க்கப்படவில்லை. வேறொரு நபரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இதை நான் சொல்வதற்குக் காரணம், இப்படிப்பட்ட கட்சிக் கண்ணோக்கோடு கூட்டுறவு சங்கங்கள் செயல்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டத்தான். கட்சிக் கண்ணோட்டத்தோடு நடைபெறுகிறது என்பதற்கு நான் இன்னும் பல உதாரணங்களை கொடுக்கக்கூடும், அதை மெய்ப்பிக்க முடியும். அதிகாரிகள் மட்டுமல்ல, அமைச்சர்களே கூட சில நேரங்களில் பலியாகிவிடக் கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது என்பதை வருத்தத்தோடு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். எதிர்க் கட்சிக் கூட்டங்களில் ஆளும் கட்சிக்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருப்பது எனக்குத் தெரியும். உதாரணமாக அண்மையில்,இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன்பு, கள்ளக்குறிச்சிக்கு அருகே நெசவாளர்களின் காலனி திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நெசவாளர்களின் காலனி திறப்பு விழாவில் மதிப்பிற்குரிய அமைச்சர், கூட்டுறவுத் துறைக்காகப் பாடுபடும் அமைச்சர் கனம் மன்றாடியார் அவர்கள், கலந்துகொள்வதாக இருந்தது. அதே நெசவாளர் காலனி திறப்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கலந்துக்கொள்வதாகவும் இருந்தது - இந்த மன்றத்திலே த இருப்பவர் அல்ல, வெளியே உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர். ஆனால் அவர் அந்த காலனி திறப்பு விழாவிற்கு என்று புறப்பட்டுப் போய் பாதி வழி சென்ற பிறகு, அவருக்கு தந்தி வருகிறது, "வரவேண்டாம்; மந்திரியவர்கள் தன் சுற்றுப்பிரயாணத்தை ரத்து செய்துவிட்டார், விழாவிற்கு அவர்